banner image

பூ மழையே 27


 

அத்தியாயம் 27


   “ஓஹோ அப்ப இந்த  ஊர் உலகத்தை பொறுத்தவரை, இப்போதைக்கு நான் தான் டி தேவராஜன். சோ கிட்ட வாடி என் இன்றைய பொண்டாட்டி.”


   என்றபடி அவளை துரத்த ஆரம்பித்தான் கேசவ், அங்கிருந்த பொருட்களை எல்லாம் அவன் மீது தூக்கி வீசி, அவனிடம் இருந்து விலகி ஓடியவள், கடைசியாக பிளவர் வாஸ் ஒன்றை அவன் தலையை குறி வைத்து வீச, அது சரியாக அவனது தலையை பதம் பார்த்தது.


   அதில் போதையோடு கூடிய வெறி அதிகமாகி, அவளை நோக்கி பாய்ந்தவன், திமிறி ஓடத் துடித்தவளின் கண்ணங்களில் மாறி மாறி அறைந்தான். அதில் சற்று தடுமாறி தூரச் சென்று கீழே விழுந்தவளது கையில், உடைந்து கிடந்த ப்ளவர்வாஸ் பட்டு ரத்தம் வரத் தொடங்கியது. 


   விகாரமாக சிரித்தபடியே கேசவ்  அவளை நோக்கி வர, அருகில் இருந்த மது பாட்டில்களை எடுத்தவளோ, அதில் இருந்த மது முழுவதையும் அவனை நோக்கி ஊற்றினாள். அதில் முக்கால் பங்கு  முகத்தில் பட்டு, மீதி அவன் உடலெங்கும் தெளித்திருந்தது. 


   “என்ன செல்லம், உனக்கு எதை எப்படி பரிமாறனும்னு கூட தெரியலையே? எனக்கு இப்படி மது அபிஷேகம் பண்ணி வச்சிருக்க?”


   கைகளில் வழிந்து கொண்டிருக்கும் ரத்தம் அவளை பலவீனமாக்க, இருந்தும் முயன்றவரை போராடிக் கொண்டிருந்தவள்,


    “ஆமான்டா அபிஷேகம் தான் தீ அபிஷேகம்.”


   என்றபடி தனது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த லைட்டரை எடுத்து கொளுத்தினாள். உடனே கலவரமான கேசவ் , 


    “ஹேய்…என்ன பண்ற… வேண்டாம் அதை ஆப் பண்ணு.”


   என்றபடி பின்னோக்கி நடந்தவன், தன் முகத்தை துடைத்துக் கொள்ள, ஏதாவது துணி இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

  

   கைகளில் வழியும் ரத்தத்தோடு காலி மது பாட்டிலை பிடித்திருந்தவள், அருகில் இருந்த சுவரில் அதை ஓங்கி உடைத்து விட்டு, ஒரு கையில் உடைந்த பாட்டிலையும், மறுக்கையில் லைட்டரையும் பிடித்தபடி அவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள். 


    “மரியாதையா உண்மையை சொல்லு? என்னோட தேவ் எங்க? கொஞ்ச  மாசத்துக்கு முன்னாடி நடந்த  ஆக்சிடென்ட்க்கு அப்பறம் தான், அவரை காணல.


   அப்ப தான் நீயும் நான் தான் தேவ்வுனு சொல்லிகிட்டு, அவர் இருக்க வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்த.”


   இவ்வளவு நேரமும் பயத்தில் இருந்தவனது முகம், இகழ்ச்சியான புன்னகையை சிந்த, கையில் இருந்த உடைந்த பாட்டிலைக் கொண்டு அவன் வலதுகை புஜத்தில் சிறிய கோட்டை கிழித்தால் கண்மணி. அதனால் ஏற்பட்ட வலியில் கேசவ் அலறத் தொடங்கினான். 

   

   “சொல்லு அவர் எங்க? அவரை என்ன பண்ணின?”


   “கொன்னுட்டோம்…அவனை டேங்கர் லாரி ஏத்தி காரோட வைச்சு நசுக்கி கொன்னுட்டோம், அதுல அவன் சட்னி ஆயிட்டான் போதுமா.


   அவனோட நஞ்சு போன பாடியை தூக்கி எரிச்சிட்டு தான், ஹாஸ்பிடலுக்குள்ள யாருக்கும் தெரியாம போய், நான் அவன் இடத்துல உட்கார்ந்துகிட்டேன்.”


    சட்டென்று கண்மணிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை, கோபத்தோடு தனது கையில் இருந்த லைட்டரை அவனை நோக்கி வீசினாள். உடல் மற்றும் முகம் முழுவதும் நெருப்பு பற்றிக் கொள்ள அலறியபடியே ஓடியவன், பால்கனியில் இருந்து தீக்காயத்தோடு கீழே இருந்த நீச்சல் குளத்தை நோக்கி குதித்திருந்தான். 


   அவனைப் பார்த்தபடியே அதற்கு மேலும் நிற்க வலுவின்று, மனமும் உடலும் துவண்டு போக, கீழே விழப் போன கண்மணியை தாங்கிப் பிடித்துக் கொண்ட தேவ், 


   “பட்டர் ஸ்காட்ச் ஹேய் பட்டர் ஸ்காட்ச், என்னைப் பாருடி.”


   என்று அவள் கண்ணத்தை தட்டிக் கொண்டிருந்தான். சுயநினைவை இழந்து கொண்டிருந்த கண்மணியின் காதுகளில், தன்னவனது பிரத்யேகமான அழைப்பு விழ, அவள் இதழ்கள் மென்மையான புன்னகையை சிந்தியது.


   மேடியை பாலோ செய்து கொண்டிருந்த தேவ்வுக்கு அழைத்த நவீன், கேசவ்வின் தகவல்கள் கிடைத்து விட்டதாகவும், கண்மணி சொன்னது போலத்தான் நடந்திருக்கிறது என்றும் கூறியவன், தற்போது பாதுகாவலர்களோடு விகாஸை பிடிக்க வந்திருக்கும் விபரத்தையும் கூற, அதற்காகவே காத்திருந்தவன் மேடியை பிடித்து அடி வெளுத்து தன் டிடெக்டிவ் நண்பர்களிடம் அவனை ஒப்படைத்தவன், அவன் போனையும் கைப்பற்றி இருந்தான். 


   “இவன் கிட்ட இருந்து கிடைக்கப் போற உண்மைகள் தான், அவனுங்களை சிக்க வைக்க நமக்கு பெரிய உதவியா இருக்கப் போகுது.”


   “நீங்க கவலையே படாதீங்க தேவ் சார், எங்க பாஸ் குடுக்கப் போற ட்ரீட்மென்ட்ல, அவன் வாயில இருந்து உண்மை மட்டும் தான் வரப் போகுது.” 


    ஜனா  பேசிக் கொண்டிருக்கும் போதே தேவ்வின் கைகளில் இருந்த மேடியின் போன் திரை ஹெச் ஆர் என்றபடி ஒளிர்ந்தது, அதை ஆன் செய்து காதில் வைத்தான் தேவ். 


     “டேய் என்னடா ஹோட்டல் பிடிச்சிருக்க, மாதவி ஹோட்டலை தேடி  கண்டுபிடிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுச்சு, நல்லவேளை அந்த கண்மணி எந்த கொஸ்டீனும் கேட்காம நவீன் கூப்டான்னு சொன்னதும் கூடவே வந்துட்டா, இப்ப தான் முதல் மாடில இருக்க கேசவ் சார் ரூமுக்குள்ள அவளை அனுப்பிட்டு வரேன், நீ இங்க பக்கத்துல தானே இருக்க? வர்றியா அவருக்கு பிறகு நாமளும் என்ஜாய் பண்ணுவோம்.”


   போனை வைத்தவன் மேலும் பல அடிகளை மேடிக்கு பரிசாக கொடுத்துவிட்டு, நண்பனிடம் விபரத்தை கூறி விட்டு கண்மணியை காண ஓடினான். 


    விக்ரமும் இந்த ஏரியாவைச் சேர்ந்த  இன்ஸ்பெக்டருக்கு அழைத்து ஹோட்டல் பெயரையும் நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தையும் கூறி உதவி கோரியிருந்தான். 


  ரிசப்ஷனில் மேடியின் பெயரைக் கூறி அந்த அறையைப் பற்றி தெரிந்து கொண்ட தேவ், வேகமாக மேல் மாடியை நோக்கி ஓடினான். அங்கு வெளியே காவல் காத்துக் கொண்டிருந்த ஹெச் ஆர்ரை ஒரே அடியில் சாய்த்து விட்டு, கதவை திறந்து கொண்டு உள்ள சென்றவன், கேசவ் எரிந்து கொண்டே மாடியில் இருந்து கீழே விழுவதைக் கண்டான், அப்போது தான் கண்மணி மயங்கி கீழே விழப் போனாள். 


    பாய்ந்து சென்று அவளை கீழே விழாமல் தனது மடியில் தாங்கியவன், அவள் கண்ணத்தை தட்டி கொண்டிருந்தான்.      


    அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, உடனே கைகளில் அவளை அள்ளிக் கொண்டு கீழே வந்தான். சரியாக அந்த நேரத்தில் தான் ஆம்புலன்ஸ்ஸோடு போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். ஹெச் ஆர்ரையும்  கேசவ்வையும் அவர்கள் கவனித்துக் கொள்ள, கண்மணியோடு மருத்துவமனைக்குச் சென்றவன், அவள் முழிப்பதற்காக காத்திருந்தான். 


   சிகிச்சை முடிந்து உள்ளே சென்று பார்த்த போது கூட, கண்மணி இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதாலும், அதிக அதிர்ச்சியாலும் ஏற்பட்ட மயக்கம் தான் என்று டாக்டர் கூறிவிட்டுச் செல்ல, கண்மணியின் கைகளை பிடித்துக் கொண்டு, அவள் கண்விழிப்பதற்காக காத்திருக்க தொடங்கினான், அப்போது மும்பையில் இருந்து அவனுடைய அலைப்பேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வர, இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று புரிந்து, கவிக்கு அழைத்தவன் கண்மணிக்கு அடிபட்ட விஷயத்தை மட்டும் கூறினான். 


   பிறகு கண்களில் காதல் பொங்க கண்மணியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், அவளை பிரிய மனமே இன்றி, அங்கிருந்து வெளியேறினான்.


Powered by Blogger.