அத்தியாயம் 25
“கேசவ்வா? ஆனா அவன் இறந்து பல வருஷம் ஆகுதேம்மா?”
தனது கைப்பையில் இருந்த ப்ளட் ரிசல்ட் பேப்பரை எடுத்து, அவன் கையில் கொடுத்தவள்.
“ தேவ் ஒரு இன்டர்வியூல தனக்கும் தன் தாத்தாக்கும், ரொம்ப ரேர் குரூப் ரத்தமான ஏபி நெகட்டிவ்னு சொல்லி இருந்தாரு. அதனால இந்த போலியான ஆள் தேவ் இல்லைன்னு நிரூபிக்க, அவனுக்கே தெரியாம அவன் ப்ளட்டை எடுத்து, பரிசோதனைக்காக அனுப்பி வைச்சேன்.
ஆனா அவனோடதும் ஏபி நெகட்டிவ் தான்னு தெரிஞ்சதும், அடுத்து என்ன பண்ணறதுன்னு தெரியாம தவிச்சு போயிட்டேன், அப்ப தான் அங்க வேலை செய்யற ஒருத்தர் சொன்ன வார்த்தைகள் எனக்கு சரியான வழியை காட்டுச்சு.
இந்த ப்ளட்ல கலந்திருந்த போதை வஸ்து, ரொம்ப அபாயகரமானதுன்னு சொன்னார். அதோட ரொம்ப வருஷமா இந்த நபர் இதை பயன்படுத்திட்டு வர்றதால, ப்ளட்ல அதிகமா அது கலந்திருக்குன்னும் சொன்னாரு. அப்பவே எனக்கு உறுதியா தெரிஞ்சிடுச்சு இவன் போலின்னு. ஆனா ப்ளட் குரூப் முதற்கொண்டு ஒரே மாதிரி இருக்கவே, நான் தேவ்வோட குடும்பத்தைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அப்ப தான் அவர் பெரியப்பாவோட குடும்பத்தைப் பத்தி தெரிய வந்தது. தேவ்வுக்கு அவரோட தாத்தா ப்ளட் குரூப் இருப்பது போலவே, அவரோட பெரியப்பா பசங்களுக்கும் அதே ப்ளட் குரூப் இருக்க சான்ஸ் இருக்கு இல்லையா? அதோட அவர் இரண்டாவது மகன் குணத்தையும், அவன் இறந்த வருஷத்தையும் கேள்வி பட்டதும் என் சந்தேகம் அதிகமாச்சு.”
நவீன் புரியாமல் அவளைப் பார்க்க,
“கரெக்டா மூனு வருஷம் முன்ன நான் உங்க ப்ரெண்டை மொதமொத பார்த்த நாளை, என்னால எப்படி மறக்க முடியும்? அப்போ அவரோட உடல் கிடைக்கிற வரை அந்த முகமூடி ஆளுங்க தேடிகிட்டே இருந்தாங்க. அவரை கொல்லறது தான் அவங்க திட்டம், ஆனா அதை அவங்க கன்பாம் பண்ண எதுக்காக தேவ் பாடியை அவ்வளவு கஷ்டப்பட்டு தேடனும்?
சோ மூனு வருஷம் முன்னவே இந்த ப்ளானை எக்ஸிகியூட் பண்ண நினைச்சு தான், தேவ்வுக்கு முன்னாடியே கேசவ் இறந்தது போல செட் பண்ணி இருக்காங்க. இப்போ இதை உறுதி செய்ய உங்க உதவி எனக்கு தேவைப்படுது.
அந்த கேசவ் நிறைய தப்பு பண்ணி அது போலீஸ் கேஸ் ஆனதா நெட்ல பார்த்தேன், அப்போ அவனோட கைரேகை மற்றும் ப்ளட் குரூப் பத்தின டீடெயில்ஸ் அங்க இருக்கும் இல்லையா?
சோ நீங்க உங்களோட செல்வாக்கை பயன்படுத்தி, அதை எப்படியாவது வெளிக் கொண்டு வர முடியுமா?”
அவள் கூறி முடித்த போது நவீன் பேச்சற்று அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். தேவ்வுக்கும் அங்கு அதே நிலை தான். சிறிது நேரத்தில் தெளிந்த நவீன்,
“கண்மணி நீ சொல்றதெல்லாம் சரியாய் தான் இருக்கு, கண்டிப்பா நான் அந்த டீடெயில் எல்லாத்தையும் எப்படியாவது கொண்டு வரேன்.
இங்க நடிச்சுட்டு இருக்கவன் மேல எனக்கும் முன்னாடியே டௌட் வந்துச்சு, அதனால அவனோட போன் மட்டும் இல்லாம, அவன் கூடவே இருக்க மினியோட போனை கூட ட்ரேக் பண்ணி ஒட்டு கேட்டாச்சு, ஆனா இதுவரை விகாஸ் அவனோட பேசவே இல்லையே? அதோட அவன் லேப்டாப் மூலமாகவும், இதுவரை மெயில்ல கூட அவனை கான்டேக்ட் பண்ணல.”
மென்மையாக புன்னகைத்தவள்,
“யார் சொன்னது அவங்க பேசிக்கலைன்னு, டெய்லியும் என்ன என்ன செய்யணும்னு கேசவ்க்கு விகாஸ் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துகிட்டு தான் இருக்கான்.”
“என்னம்மா சொல்ற எந்த போன் மூலமா? இல்ல யார் மூலமா?”
“ டெய்லியும் அந்த போலி தேவ்வை பார்க்க பல பொண்ணுங்க வருவாங்க இல்லையா, அவங்களை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வர்ற டிரைவர் மேடி, எப்பவுமே ஹோட்டலுக்கு உள்ள வரமாட்டான்.
ஆனா ஒவ்வொரு முறை பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து விடும் போதும், தன்னோட போனை அந்த பொண்ணுங்க கிட்ட கொடுத்து விடவான். அவங்க திரும்பி வந்ததும் அது கரெக்டா அவன் கைக்கு வந்திடும். அந்த போன் மூலமாத் தான் அண்ணனும் தம்பியும் தகவல்களை பரிமாறிக்கிறாங்க.”
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நவீன், தெய்வமே என்று கத்தியபடி அவள் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான்.
“ஐயோ அண்ணா என்ன பண்ணுறீங்க? முதல்ல கீழே இருந்து எழுந்திருங்க.”
“இல்லம்மா இனி என் கம்பெனியோட மெயின் அட்வைஸ்ஸரே நீ தான்.”
“விளையாடாதீங்கண்ணா எப்படியாவது அவனுங்களுக்கு எதிரான ஆதாரத்தை, சீக்கிரமா கொண்டு வாங்க. அப்ப தான் அவனை வச்சு தேவ் எங்க இருக்கார்னு கண்டு பிடிக்க முடியும். அவர் எப்படி இருக்காறோ? என்ன நிலைமையில இருக்காறோ தெரியில.”
என்றபடி அவள் கண்களில் திரண்ட நீரை துடைத்தபடி தலைகுனிந்தாள். அதை கண்டு மனம் பொறுக்காத நவீன் தேவ்வை பார்க்க, அவன் மனதை அறிந்து கொண்டவன் போல சொல்ல வேண்டாம் என்றபடி தலையை ஆட்டினான் தேவ்.
“ நீ கவலைப்படாத ம்மா, கண்டிப்பா தேவ்வுக்கு எதுவும் ஆகி இருக்காது, நீ தைரியமா இரு.”
அதன் பிறகு கண்மணி அங்கிருந்து கிளம்ப, நவீன் தானும் உடன் வருவதாக கூறினான்.
“இல்லண்ணா வேண்டாம், எப்படியும் நீங்களும் அந்த அண்ணன் தம்பியோட கண்காணிப்புக்கு கீழ இந்நேரம் வந்திருப்பீங்க, இந்த நிலையில ஆபீஸ்ல ஒர்க் பண்ற பொண்ணை விடுவதற்காக, நீங்க கிளம்பினது தெரிஞ்சா, அவங்க வட்டத்துக்குள்ள நானும் வந்திடுவேன்.”
“நீ சொல்றதும் சரி தான் ம்மா, சரி பார்த்து போயிட்டு வா. கூடிய சீக்கிரம் ஒரு நல்ல தகவலோட உன்னை சந்திக்கிறேன்.”
கண்மணி அங்கிருந்து கிளம்பி விட, வெளியே வந்த தேவ்வை நோக்கித் திரும்பிய நவீன்,
“தேவ் உண்மையை சொல்லி இருக்கலாம் இல்ல டா? கண்மணியை பார்க்கவே பாவமா இருக்கு.”
“வேண்டாம் நவீன் இப்ப மட்டும் நான் உண்மையை சொன்னா, கண்டிப்பா அவ அமைதியா இருக்க மாட்டா, என்னோட பட்டர் ஸ்காட்ச்சை இந்த பிரச்சனைக்குள்ள, வாண்ட்டடா இழுத்து விட எனக்கு விருப்பம் இல்லடா.
இப்போதைக்கு அவளுக்கு என்னைப் பத்தின உண்மை தெரியாம இருக்கறது தான் நல்லது, அந்த கேங்குக்கு மட்டும் அவ மேல கொஞ்சம் டவுட் வந்தாக் கூட, அது கண்மணியோட உயிருக்கே ஆபத்தா முடிஞ்சுரும் டா.”
பப்பில் மதுக் கோப்பையுடன் அமர்ந்திருந்த கேசவ்விடம், மினி அப்போது தான் கண்மணியை பற்றி மீண்டும் ஒருமுறை கூறிக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் அங்கு அவசரமாக வந்த ஹெச் ஆர்,
“சார் நான் நல்லா விசாரிச்சுட்டேன், அந்த பொண்ணோட ஹாஸ்டல், நவீன் தங்கியிருக்க கெஸ்ட் ஹவுஸ் பக்கமா இல்ல, மினி சொன்னது போல நவீன் சாரை சந்திக்கறதுற்காகத் தான் அந்த பொண்ணு அங்க வாண்டட்டா போயிருக்குது.”
“நீங்க சொல்றத வச்சு பார்த்தா, யாருக்காகவோ அந்த பொண்ணு ஸ்பையா வேலை பார்க்குதுன்னு சந்தேகம் வருதே? ஒருவேளை இந்த நவீனே என்னை உளவு பார்க்க அந்த பொண்ணை செட் பண்ணி வச்சிருப்பானோ?”
“ஆமா சார் எனக்கும் அது தான் டவுட்டா இருக்கு? இவ்வளவு நாள் இல்லாம இந்த பொண்ணு வந்த ஒரு வாரத்திலேயே, எப்படி நவீன் சார் இங்க வந்து சேர்ந்தார். அது மட்டும் இல்லாம யாருக்குமே தெரியாம வெச்சிருந்த, கம்பெனி ஷேர்ஸ் சேல் பண்ண போற விஷயம், எப்படி அவருக்கு தெரிஞ்சது?”
“அப்போ கண்டிப்பா அவளைப் பத்தி அண்ணா கிட்ட சொல்லியே ஆகனும்.”
“அப்போ நாளைக்கு தான் அவளோட கடைசி நாள்னு சொல்ல வர்றீங்களா டார்லிங்?”
மினியை கண்டு விஷம புன்னகையை சிந்தியவன்,
“பூவை கசக்கி எறிய வேற வழிகளும் உண்டு பியூட்டி.”


