banner image

பூ மழையே 24

 


அத்தியாயம் 24


    கெஸ்ட் ஹவுஸ்க்குள் நுழைந்த மறுநிமிடமே கதவை மூடிவிட்டு, நவீனை சரமாரியாக மொத்தத் தொடங்கினான் ராம்சிங். 


   “டேய் டேய் விடுடா என்னை… அட விடுடா, நானே உயிர் தப்பிச்சு வந்திருக்கேன், எதுக்கு டா என்னை  போட்டு இந்த அடி அடிக்கிற?”


    “பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா என்ன? கொஞ்ச நேரத்துல என் ஹாட்பீட்  எவ்வளவு எகிறிடுச்சு தெரியுமா? அவனுங்க திடீர்னு இப்படி ஒரு பிளான் போடுவாங்கன்னு நான் எதிர்ப்பாக்கவே இல்ல, அதுவும் அந்த ஹெச் ஆர் மண்டையன் உள்ள தன் ப்ளானைப் பத்தி, சொல்லிட்டு இருக்கும்போது தான் எனக்கு தெரிய வந்துச்சு. உடனே உனக்கு கால் பண்ணா எடுக்கவே மாட்டேங்குற, அதனால தான் அவசரமா மெசேஜ் போட்டு விட்டேன். 


   அதை நீ பார்த்தியா இல்லையான்னு கூட எனக்கு தெரியல, அதனால தான் என்னோட டிடெக்டிவ் ப்ரெண்ட்கிட்ட உதவி கேட்டேன், நல்லவேளை அவன் இங்க ஊர்ல தான் இருந்தான், நீ டாக்ஸில வந்து இறங்குற வரைக்கும் எனக்கு மூச்சே இல்ல தெரியுமா, அந்த அரைமணி நேரத்துல ஆயிரம் தடவை ஹார்ட் அட்டாக் வந்தது போல ஆகிடுச்சுடா.”


   “இல்லடா நான் ஏர்போர்ட் செக்கிங்ல இருந்தேன், உன் ப்ரெண்ட் விக்ரம், அவரோட அசிஸ்டெண்ட் ஜனா கூட வந்து, என்னை ஏர்போர்ட் வாசல்ல மீட் பண்ணாரு. அவரு தான் சரியான நேரத்துல என்னை காப்பாத்தினாரு. 


    அவங்களோட தான் நானும் வண்டியில் ஏறினேன், திடீர்னு இடையில நாலு அஞ்சு பேர் எங்களை தாக்க வர, அவங்க இரண்டு பேரும் தான் அவங்களை சமாளிச்சு என்னை காப்பாத்தினாங்க. கொஞ்ச நேரத்துல போலீஸ் வண்டி வந்து அத்தனை பேரையும் அள்ளிக்கிட்டு போயிடுச்சு.


   விக்ரம் தான் வேறொரு டாக்ஸி மூலமா என்னை இங்க அனுப்பி வச்சார். ஆமா என்னடா இது நம்ம கம்பெனி ரூமை லாட்ஜ் ஆக்கி வச்சிருக்கானுங்க, நீ அதையெல்லாம் எப்படி டா தேவ் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க?”


    “எனக்கும் கோபம் வருது தான் ஆனா இப்போதைக்கு, என்னை போல வேஷம் போட்டுட்டு வந்திருக்கிறவனோட ஆதிமூலத்தை கண்டுபிடிக்க  வேண்டாமா?  


   ஆன்சைட்ல என் கண்ணு முன்னாடி நடந்த அந்த கோர விபத்தை என்னால இப்பவும் மறக்கவே முடியாது டா, பிளைட்ல என் பக்கத்துல இருந்தவரோட தான் என் வண்டியில் ஏறினேன். கிட்டத்தட்ட அவர் டிரஸ்ஸும் என் டிரஷ்ஸும் ஒரே மாதிரி தான் இருந்தது. திடீர்னு அவருக்கு லோ சுகர் ஆகவும் மயக்க நிலைக்கு போனவரை காப்பாத்த, காபி ஆர் ஸ்வீட் வாங்கி வர நினைச்சு, டிரைவர் கிட்ட வண்டியை ஓரமா நிறுத்த சொல்லிட்டு, நான் கடைக்குள்ள ஓடினேன். வெளியே வரும் போது என் கண்ணு முன்னவே ஆப்போஷிட்ல வந்த டேங்கர் லாரி, அந்த காரை அடிச்சு நொறுக்கி தள்ளிட்டு போயிட்டு இருந்துச்சு. 


   அடுத்தடுத்து பல கார் மேல மோதி பெரிய விபத்தையும் அது ஏற்படுத்திடுச்சு, அப்போ என் மேலேயும் வேறொரு கார் மோதி, எனக்கும் நினைவு தப்பி போயிடுச்சு. அஞ்சு நாள் கழிச்சு நான் கண் முழிக்கிறதுக்குள்ள என்னைப் போலவே இருக்க இன்னொருத்தன், நான் தான் தேவ்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல்ல வந்து படுத்து கிடக்கான்.


    அவன் இவ்வளவு பெரிய பிளான் பண்ணி என் வீட்டுக்குள்ள நுழைய என்ன காரணம்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். என்னைப் போலவே என் குடும்பத்தாரும் ஆபத்துல சிக்கிடக் கூடாதுன்னு தான், அவங்க கண்ணுக்கே தெரியாத, பலமான பாதுகாப்பை ஏற்படுத்திட்டு, இவன் திட்டத்தை பத்தி தெரிஞ்சுக்க இங்க வந்தேன்.”


   “ஆனா தேவ் இதுல புரியாத விஷயம் என்னன்னா அவனுக்கும் எப்படி உன்னோட பிளட் குரூப்பே இருக்கு? 


   உன்னைப் போல இருக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி வேணா பண்ணிக்கலாம், ஆனா சேம் ப்ளட் குரூப்?”


   “எனக்கும் அதே சந்தேகம் தான் இவ்வளவு பர்பெக்ட்டா என் போலியை தயார் செஞ்சிருக்காங்க. இப்ப நானே போய் உண்மையை சொன்னாலும், அவன் போலி தான்னு நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்ல.”


   “ நீயாவது அவன் ப்ளட் குரூப்  டெஸ்ட்டிங்கை ஹாஸ்பிடல் செக்கிங் அப்ப செஞ்ச, ஆனா உன் ஆளு…செம தில்லுடா இதுக்காகவே ஒரு டிராமா போட்டு பர்பெக்ட்டா காரியத்தை முடிச்சிருக்கா.”


   “ஆமா டா நான் அவளை இங்க எதிர்பார்க்கவே இல்ல.”


   “டேய் டேய் பார்த்தியா என்கிட்டயே ரீல் வுடற, அந்த பொண்ணை எப்படியாவது பார்க்கனுங்கற ஆசைல தானே நீ தமிழ்நாட்டுல கம்பெனியை ஆரம்பிச்ச, அன்னைக்கே உன்னை விட்டு குடுக்க மாட்டேன்னு மிரட்டிட்டு போன மிஸ்ஸஸ் தேவராஜன், எப்படியும் உன்னை கண்காணிச்சுட்டு தான் இருந்திருப்பாங்க. அப்பறம் எப்படி வராம இருப்பாங்க, அதோட பிப்ரவரி பதினாலு வேற நெருங்கிட்டு இருக்கு. அவங்க செஞ்ச சபதத்தை காப்பாத்த உன்னைத் தேடி வந்து தானே ஆகனும்.”

    

   என்று அவன் தேவ்வை கண்டு கேலி சிரிப்பு சிரிக்க, 


   “சிரி சிரி  இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன ஒரு புயல் தாக்க வரப் போகுது, அப்ப நான் நல்லா என்ஜாய் பண்ணி சிரிக்கிறேன்.”


   “எது? டேய் என்ன டா சொல்லறே?”


   என்று அவன் சொல்லி முடிப்பதற்கும், வாசலில் அழைப்புமணி ஓசை ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. 


    தேவ் நவீனைக் கண்டு நக்கலாக சிரித்தபடியே அறைக்குள் சென்று, அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் ஒளிந்து நின்று கொள்ள, அவன் செயலைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு, எழுந்து சென்று கதவை திறந்தான் நவீன். 


    ஏதோ ஒரு வேகத்தில் நவீனைக் காண வந்துவிட்டாலும், அன்று சில மணிநேரமே கண்ட தன்னை, அவருக்கு நியாபகம் இருக்குமா என்று, வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்தாள் கண்மணி.


   வாசலில் தயங்கி நிற்கும் கண்மணியை கண்டவனது உள்ளம், அவளுக்காக உருகியது. அவளை மேலும் தவிக்க விடாமல், 


   “அடடே மிஸ்ஸஸ் தேவராஜன் எப்படி இருக்கீங்க? ஏன் வெளியவே நிக்கறீங்க? உள்ள வாங்க மேடம்.”


   “ரொம்ப தேங்க்ஸ் ண்ணா, என்னை உங்களுக்கு நியாபகம் இருக்காதோன்னு நினைச்சேன்.”


   “அது எப்படி இல்லாம போகும் தங்கச்சி, உங்களோட இருந்த அந்த கடைசி நிமிடங்களை மறக்கத் தான் முடியுமா? என் ப்ரெண்ட்டு இம்ப்ரஸ் ஆனானோ இல்லையோ, அந்த ஒத்த வார்த்தைல நான் உன்னோட ஃபேன் ஆகிட்டேன் ம்மா. ஆமாம் எதுவும் முக்கியமான விஷயமா? நேரடியா என்னை தேடி வந்திருக்க? எதாவது உதவி வேணுமா தங்கச்சி.”


  “ ஆமாண்ணா என் புருஷனை கண்டுபிடிக்க எனக்கு உங்க உதவி தேவைப்படுது. இப்போ நீங்க ஆபீஸ்ல பார்த்தப்பவே தெரிஞ்சிருக்குமே?”


   “என்னம்மா சொல்ற நீ? எதை வச்சு இங்கிருக்கறது தேவ் இல்லைன்னு சொல்ல வர்ற? தகுந்த ஆதாரம் இல்லாம எப்படி இதை ஒத்துக்க முடியும்?”


  “ ஆதாரம் தானே நிறைய இருக்குன்னா, என் தேவ் ரொம்ப நல்லவர் ஒரு நாள் பூராவும் அவரோட தனியா, அவர் கூடவே இருந்திருக்கேன். ஆனா அவர் பார்வை கூட என் மேல தப்பா விழுந்தது இல்ல, ஆனா இங்க இருக்கிறவன் கண்ணு முழுவதும் போதை, அதைவிட வயசு வித்தியாசம் கூட பார்க்காம பொண்ணுங்களை அவன் பார்க்கற பார்வை இருக்கே… அப்படியே கண்ணை பிடுங்கி வீசனும் போல அப்படி ஆத்திரம் வருது.”


   உள்ளே ஒளிந்திருந்து அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவ்வுக்கு கண்களில் அவள் மேல் காதல் மின்னியது. இப்போதே சென்று அவளை அணைக்கத் துடித்த மனதை, வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தான். 


   “அது மட்டும் இல்லண்ணா உங்க ப்ரெண்டுக்கு ஆட்டோகேட்னா எவ்வளவு பிடிக்கும்னு, உங்களுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும். அவர் கனவு ப்ராஜெக்ட்க்காக உருவானது தான் இந்த சென்னை கம்பெனி, அவர் ஆட்டோகேட் சம்பந்தப்பட்ட எப்பீ குரூப்ல மெப்பரா இருக்கார். 


    அதுல அவரோட பதிவு ஒருநாள் கூட இல்லாம இருந்தது கிடையாது, ஆனா ரீசன்டா அவருக்கு நடந்த ஆக்ஸிடன்ட்க்கு பிறகு அதுல எந்த பதிவுமே இல்ல, அவர் ரிகவர் ஆகி வந்த பிறகும் கூட அதுல எந்த பதிவும் இல்ல. அதுவே அவர் எதுவும் பிரச்சினைல சிக்கி இருக்காறோன்னு, எனக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்குது. ஆன்சைட்ல வச்சு தான் அவரை ஏதோ பண்ணிட்டு இந்த போலியான தேவ் அவர் பெயரைச் சொல்லி உள்ள புகுந்திட்டான். கண்டிப்பா அவன் தான் தேவ்வை எங்கேயாவது ஒளிச்சு வச்சிருக்கனும். ”


   தேவ் கண்கள் விரிய அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான். உண்மை தான் தன் ப்ளட் குரூப் முதற்கொண்டு, சரியாக இருக்குமாறு போலியை உருவாக்கிய தன் எதிரிகளுக்கு, தான் உயிரோடு இருக்கும் விஷயம் எந்த வகையிலும் தெரியக் கூடாது, என்று தான் இந்த பிரச்சனை தீரும்வரை, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று, தேவ் எப்பீ பக்கம் செல்லவில்லை. அதோடு எப்படி ஆன்சைட்டில் தான் இது நடந்திருக்கும் என்று, சரியாக கணித்தாள். 


   “எனக்கு புரியுதும்மா ஆனா கோர்ட்ல இதையெல்லாம் ஆதாரமா சொல்ல முடியாதே. யாரோ போலியா தேவ் மாதிரியே ஒருத்தனை உருவாக்கி, இங்க அனுப்பி வச்சிருக்கான். அவனோட பின்புலத்தை முதல்ல நாம எப்படியாவது கண்டுபிடிக்கனும்.”


   “அதெல்லாம் நான் எப்பவோ கண்டு புடிச்சுட்டேன் ண்ணா, தேவ் மாதிரியே போலியா வேஷம் போட்டுட்டு இருக்கறது அவரோட பெரியப்பா மகன் தான். ”

  

   நவீனும் தேவ்வும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். ஏற்கனவே அவர்கள் யூகித்த ஆள் தான் என்றாலும், எப்படி ஒரு வாரத்தில் இதை கண்டறிந்தாள்? என்ற ஆச்சரியம் அவர்களுக்கு தோன்றாமல் இல்லை. ஆனால் அது விகாஸாக இருக்க முடியாது என்பதற்கும் ஆதாரம் அவர்களிடம் இருந்தது. 


    “என்னம்மா கண்மணி சொல்ற,  அப்ப இங்க நடிச்சுட்டு இருக்கறது விகாஸ்ஸா? ஆனா அவன்…”


 என்று நவீன் ஏதோ பேச வர, 


   “இல்லண்ணா, இங்க போலியான தேவ்வா நடிச்சுட்டு இருக்கறது, அவர் பெரியப்பாவோட இரண்டாவது பையன்  கேசவ், ஆனா இதுக்கு மூளையா செயல்படறது தான் அவங்க அண்ணன் விகாஸ்.”


Powered by Blogger.