banner image

பிம்பம் 18


 

அத்தியாயம் 18


      சிவாவிற்கு சித்ராவின் திட்டங்களை பற்றி தெரிந்திருந்தாலும், தனக்கு தெரிந்து கொண்டதைப் போல, அவன் சித்ராவிடும் காட்டிக்கொள்ளவில்லை. சாந்தியுடன் கோயிலுக்கு சென்று விட்டு சிறிது நேரத்திலேயே அங்கிருந்து யாரும் அறியாமல் கிளம்பி விட்டான். வந்தவன் கொல்லை புறத்தில் ரேகாவோடு சேர்ந்து சித்ராவின் வரவுக்காக காத்திருந்தான், இதோ அவளும் வந்துவிட்டாள்.


    சித்ரா இவர்கள் இருவரையும் கண்டு அதிர்ந்து போய் நின்று விட்டால், அவர்கள் அவளை நோக்கி முன்னேறி வருவதை கண்டு, உடனே திரும்பி வீட்டிற்குள் செல்ல முயன்றாள், ஆனால் அவளை பார்த்து சிரித்த படி,  நாகலிங்கம் பாதையை மறைத்து கொண்டு நின்றிருந்தான்.


  அவளது மூளை, தான் வசமாக மாட்டி கொண்டதாக  எச்சரிக்கை செய்தி அனுப்பியது, இதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று அவள் யோசிக்க தொடங்கிய போது, ரேகா அவளது கைப் பையினை பிடுங்கி, அவளது போனை எடுத்து, அதிலிருந்து யார் யாருக்கு அவள் அழைப்பு விடுத்துள்ளால் என்று சோதிக்க தொடங்கினாள்.


  "மாமா, அவளோட அப்பா அம்மாக்கு தான் கூப்பிட்டு இருக்கா, ஆனா அவங்க போனை எடுக்கல போல.......ஜுரோ டைமிங்ன்னுதா காட்டுது, அப்படின்னா அவங்க சிக்னல் இல்லாத இடத்துல இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. என்ன சித்ரா குடும்ப பொண்ணு, இப்படி அர்த்த ராத்திரியில, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போக நினைக்கலாமா????. அப்புறம் குடும்ப கவுரவம் என்ன ஆகிறது????"


  "ச்சீ... கௌரவத்தை பத்தி நீ பேசறியா?  அடுத்தவ புருஷனோட குடும்பம் நடத்துற, நீ எல்லாம் அதை பத்தி பேசாதே,...... நீ என்கிட்ட பழகுனதே என் பணத்துக்காக தான். உன் அண்ணனை என்னோட சேர்த்து வச்சிடனும்னு நினைச்சே?... அது முடியல, அதுனால நீ காதலிச்சவனுக்கே, என்னை மனைவியா ஆக்கிட்ட, இப்போ  ரெண்டாந்தாரமா அவருக்கு வாக்கப்பட ரெடி ஆகிட்ட, உனக்கு வெக்கமா இல்ல?"


      பலமாக சிரிக்க தொடங்கிய ரேகா,


    " பரவாயில்லையே எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்க,....அதோட இதையும் தெரிஞ்சிக்கோ,.... நான் நம்பர் டூ கிடையாது, நீ தான் என் புருஷனை காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கே, புரியலையா?.... என் மாமா கூட, அவர் பொண்டாட்டியா, நான் வாழ தொடங்கி பல வருஷம் ஆச்சு, நீயா தான் வாலன்டியரா வந்த, இப்போ எங்களை குத்தம் சொன்னா? இது உனக்கே நல்லா  இருக்காம்மா???"


  அவளிடம் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு முன்னேற நினைத்த சித்ராவை, கைநீட்டி தடுத்த சிவா அவளிடம் பேச தொடங்கினான்.


  "எங்க மேடம் யார்கிட்டயும் சொல்லாம சைலண்டா கிளம்புறீங்க?.... வீட்டை விட்டு போறதா ஐடியாவா?...... இல்ல...... இந்த ஊரை விட்டே எஸ்கேப் ஆகி போறதா பிளான்னா?...."


    "எனக்கு இங்க இருக்க பிடிக்கல, அதனால வீட்டை விட்டு போறேன்?"


      "ஏன்?......பதில் சொல்லாம இந்த இடத்தை விட்டு நீ நகர முடியாது."


      "ஏன்னா, என் புருஷன் எனக்கு மட்டும் தான் புருஷனா இருக்காருன்னு  நினைச்சுட்டு இருந்தேன், இப்பதான் தெரியுது, அவன் பணத்துக்காக தான் என்னை கல்யாணமே பண்ணி இருக்கான்னு,.... அதோட, ஏமாத்தி என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே, இன்னொருத்தி கூட புருஷனா வாழ்ந்துகிட்டு இருந்திருக்கான், என்னை  கல்யாணம் செஞ்சதுக்கு அப்பறமும் கூட,  இப்போவரைக்கும் அவ கூடத்தான் தொடர்புல  இருக்கான். இந்த பதில் போதுமா? இல்ல இன்னும் வேற ஏதாவது சொல்லனுமா?"


  "அதை நீ வெளிப்படையாவே காலைல எல்லாரும் முன்னாடியும் சொல்லிட்டு கிளம்பலாமே?"


  "சொல்லலாம்தான் அவன் ஒரு துரோகியா மட்டும் இருந்தா, ஊரை கூட்டி சட்டையை புடிச்சு கேள்வி கேட்டு சண்டை போட்டு இருப்பேன். ஆனா,...... அவன் ஒரு கொலைகார கூட்டத்திற்கே தலைவனா இல்ல இருக்கான்???.."


  "ரேகா நான் சொல்லல அவளுக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு, அது தான் இங்க இருந்து ஓட நினைக்கிறான்னு."


  சிவா அவளை நோக்கி முன்னேறி வந்தான், சித்ரா அவனிடமிருந்து விலகிப் போக, அவள் வலது கையை முதுகுபுறமாக திருப்பி பிடித்தான், திடீரென்று அவளது கைகளை திருப்பியதால், நரம்பு இழுத்துக் கொள்ள சித்ரா வலியில் துடித்தால்.


  "உன் கூட இவ்வளவு நாளா வாழ்ந்த எனக்கு, உன்னை பத்தி தெரியாதா? சொல்லு என்ன பிளான் உன்னோடது? முதல்ல உனக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சது, சொல்லப் போறியா? இல்லையா?"


    ஆசை வார்த்தை பேசியவன் இன்று அவளை அதட்டி கொண்டிருந்தான், உன் மீது பூப்பட்டாலே எனக்கு நோகுமடி என்று காதல் மொழி பேசியவன், இன்று அவளது கைகளை முறுக்கியதால் ஏற்பட்ட வலியில், கண்களில் நீர் வந்த போதும், அதைப் பற்றி கவலையே இல்லாமல் அவளை மிரட்டி கொண்டிருந்தான்.


  "ரேகா அவளோட பர்ஸ்ல ஏதாவது டாக்குமெண்ட்ஸ் இருக்கான்னு பாரு?"


  "இதுல கொஞ்சம் பணமும், அவளோட போனும் மட்டும் தான் மாமா இருக்கு, வேற எதுவுமே இல்ல....... சித்ரா, ஒழுங்கா அவர் கேக்குறதுக்கு பதிலை சொல்லு, இல்ல,....... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பொறக்க வேண்டிய உன் பிள்ளை, இப்பவே பிறந்திடும்..... எப்படி வசதி?"


  தனது குழந்தையின் உயிரை காப்பாற்றிக் கொள்ள பயந்து கொண்டு, உண்மையை கூறி விட்டால், பாதிக்கப்பட்டிருக்கும் அத்தனை உயிர்களையும் காப்பாற்ற முடியாது. அதனால் எக்காரணம் கொண்டும், தனது இமெயிலில் சேமித்த விபரங்களை பற்றி, தன் உயிரே போனாலும் கூறக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டால் சித்ரா, இருந்தும் இவர்களை திசை திருப்ப பேச தொடங்கினாள்.


  " நேத்து மதியம் ரேகாவை தேடி அவ வீட்டுக்கு வந்தப்பதான், நீங்க அவ கூட பேசிக்கிட்டு இருக்கறதை கேட்டேன், ஒருவேளை நான் இங்க இருந்தா, குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு பயந்து தான் ஊருக்கு போகலான்னு முடிவு செஞ்சேன், இது தவிர என்கிட்ட எந்த பிளானும் கிடையாது என்னை நம்புங்க."


  "மச்சான் இதுக்கு மேலயும் இவளை உயிரோட விட்டு வைக்கணுமா??.


     என்ன மாமா பேசாம நிக்கிற?.... என்ன மாமா, பொண்டாட்டி  பாசம் தடுக்குதா?.... இல்ல,.....அவ வயித்துல இருக்க புள்ள பாசம் தடுக்குதா???... என் வயித்துல  உண்டான உன் பிள்ளைகளையெல்லாம், எத்தனை தடவை கலைச்சிருப்பே????.  அப்போ இல்லாத பாசமா, இப்போ வந்துட போகுது????"


      நிலைமை கைமீறி போவதை உணர்ந்த சித்ரா, அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, தன் பலத்தை ஒன்று திரட்டி சிவாவை தள்ளி விட்டுவிட்டு, அங்கிருந்து ஓட தொடங்கினாள். அந்த வீட்டை விட்டு தாண்டுவதற்கு முன்பே ஒரு கார் வந்து அவளது வழியினை அடைப்பது போல்  நிற்க, திடீரென்று வந்த வண்டியால், சித்ரா தடுமாறி கீழே விழுந்தாள்.

  


Powered by Blogger.