Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, October 18, 2025

பிம்பம் 17


 

அத்தியாயம் 17


    சித்ரா ஏதோ தைரியத்தில் டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்து விட்டாலும், இந்த கொலைகார கும்பலை மீறி எப்படி ஊரை விட்டு வெளியே செல்வது என்று யோசிக்க தொடங்கினால்,... எப்படியும் ஊரில் அனைவரும் சித்ரா பௌர்ணமி அன்று கோயிலில் இருப்பார்கள், அந்த சமயத்தில் குறுக்குப் பாதையில் நடந்து சென்றால், மெயின் ரோட்டில் வரும் ஏதாவது ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டாவது, பக்கத்து ஊரை அடைந்து விடலாம் என்று நினைத்தால்.

    உடைமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டால், எதிரில் யாரேனும் பார்த்தால் மாட்டிக் கொள்வோம், அதனால் பயணத்துக்கு தேவையான பணத்தையும், தனது மருத்துவ குறிப்புகள் கொண்ட பைல்லை, மொபைலில் போட்டோவாகவும் எடுத்துக் கொண்டாள். எதற்கும் மீண்டும் தனது தந்தைக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று அவரது போனுக்கு தொடர்பு கொண்டாள், ஆனால் இப்போதும் அதேபோல் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூற, நாளைய இரவுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

  சிவா இரவு வீட்டுக்கு வருவதற்கு முன்பே இவள் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டால், அடுத்த நாள் காலை வெகு நேரம் ஆகியும் அவள் எழாமல் இருக்க, அவன் உடும்புக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்த போது,  சோம்பலாக இருப்பதாகவும், தூக்கம் வருவதாக கூறி படுத்துக்கொண்டாள். சிவாவும் அவனது அம்மாவிடம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு கோயிலுக்கு சென்று விட்டான். 

  அன்று மாலை அனைவரும் கோயிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர். சித்ரா தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும், மற்ற அனைவரும் கோவிலுக்கு சென்று வருமாறு கூறினாள், ஆனால் சிவா தான் உடன் இருப்பதாக கூற, அவள் வேண்டாம் நான் ஓய்வெடுத்தால் சரியாகி விடுவேன், என்று கூறி அவனையும் சாந்தியுடன் கோவிலுக்கு அனுப்பி வைத்தாள். 

பிறகு அவள், அவர்கள் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவசரமாக தனது ஹேண்ட் பேக்கில் பணத்தையும் மறக்காமல் அவளது ஃபோனையும் எடுத்துக்கொண்டு முன் வாசல் கதவை தாள் போட்டுவிட்டு, அவர்கள் பெட் ரூமின் பின்புறம் இருக்கும் கொல்லைபுறம் வழியாக, கதவைத் திறந்து வெளியே வந்தவள், அப்படியே அதிர்ந்து நின்று விட்டால்.

     ஏனென்றால் அங்கு கொல்லைப்புறத்தில், அவளது வருகைக்காக அவனது கணவன் சிவப்பிரகாசும், ரேகாவும் காத்துக் கொண்டிருந்தனர்.

  அவள் போன் செய்து டிக்கெட் புக் செய்த டிராவல்சில் தான், டாக்டர் தாமோதரன் என்றுமே, மும்பையில் இருந்து மெடிசன்களை வர வைத்து, தனது காரில் அதை ஏற்றுக் கொண்டு, மார்ச்சுவரி வழியாக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான். அன்றும் அதே போல டிராவல்ஸுக்கு வந்திருந்தான்.

    "என்னப்பா ராஜ்?...... எப்படி இருக்க? ட்ராவல்ஸ் எல்லாம் எப்படி  ஓடுது?"

  "அடடே வாங்க டாக்டர் சார், கொரோனா வந்ததால ஊரடங்கு வேற அமல் படுத்திட்டாங்க, எப்பவாவது தான் ஒன்னு ரெண்டு டிக்கெட் வருது, அதுலயும் ஏதாவது கொரோனா பேசன்ட் வந்துருவாங்களோன்னு மனசுக்குள்ள திக்கு திக்குன்னு இருக்குது. நீங்க தான் எனக்கு ரெகுலர் கஸ்டமராயிருந்து, இந்த கொரோனா டைம்லையும், என்னை வாழ வைக்கிறீங்க.... இப்ப கூட பாருங்க,  மெய்காரன் பட்டியிலிருந்து ஒரு பொண்ணு போன் பண்ணி டிக்கெட் புக் பண்ண சொல்லுச்சு, அந்த பொண்ணுக்கு டிக்கெட் புக் பண்ணலாமா வேண்டாமான்னு எனக்கு அவ்வளவு சந்தேகம்?.... அப்புறம் அந்தப் பொண்ணு பிரக்னண்டா இருக்கிறேன்னு சொன்னதால, மனசு கேட்காம நானும்  நாளைக்கு நைட் 8 மணி பஸ்கான டிக்கெட்டை புக் பண்ணிட்டேன்."

      "மெய்க்காரன்பட்டியா?..... அங்க சித்ரா பௌர்ணமி திருவிழா ஆச்சே?....கம்பம்  போட்டதும் அங்கிருந்து யாரும் ஊரை விட்டு வெளியே போக மாட்டாங்களே?..."

    "ஆமா சார் அந்த பொண்ணு பிரக்னண்டா இருக்குதாம், அவங்க அப்பா அம்மாவை பார்க்க போகணும்னு சொல்லி டிக்கெட் புக் பண்ணுச்சு, எனக்கு டவுட்டாதான் இருந்தது, ஆனா அந்த பொண்ணு தன்னுடைய ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எனக்கு மொபைல்ல மெசேஜா அனுப்புனதுக்கு அப்புறம் தான், மனசு கேட்காம டிக்கெட்டை புக் பண்றேன்னு சொல்லிட்டேன். நாளைக்கு இங்க வரும்போது காசு கொடுத்தா போதும்னு சொல்லிட்டேன். ஆனாலும் மெய்காரன் பட்டியில் அதிகமா கொரோனா சாவு வேற விழுந்துட்டு இருக்கு!.... ஒரு பயம் இருக்கதான் செய்யுது டாக்டர் சார்."

  டாக்டர் தாமோதரனுக்கு ஏனோ  சந்தேகம் துளிர் விட்டது.

    "எது ப்ரக்னண்டா இருக்குற பொண்ணா?.... எத்தனை பேருக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லி இருக்கு?."

   "அந்தப் பொண்ணுக்கு மட்டும் தாங்க டிக்கெட் புக் பண்ணுச்சு."

  "ஏம்பா பிரக்னண்டா இருக்க பொண்ணை யாராவது தனியா அனுப்புவாங்களா?..... ஒரு வேலை அந்த பொண்ணு பொய் சொல்லிட்டு, கொரோனாவோட உன் பஸ்ல ஏறி வெளியூர் போற ஆளா இருந்தா?....  அப்பறம் அரசாங்கத்தில் இருந்து வந்து, உன்னால தான் ஊருக்குள்ள எல்லாருக்கும் கொரோனா பரவுச்சின்னு, உன் டிராவல் ஆபீசையே  இழுத்து மூடி சீல் வெச்சிருவாங்க...."

  "அய்யய்யோ என்ன டாக்டர் சொல்றீங்க????...."

  "ஆமாப்பா இப்ப எல்லாம் கொரோனா டைம்ல, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போகணும்னா நெகட்டிவ் சர்டிபிகேட்  காமிக்கணும் தெரியுமில்ல????...

அந்த பொண்ணு ஏதோ ரிப்போர்ட் காமிச்சுதுன்னு சொன்ன இல்ல,...

அதை காட்டு, அதுல அந்த சர்டிபிகேட் ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்."

    "இதோ இதுதான் அந்த பொண்ணு அனுப்புன சர்டிபிகேட்ஸ் டாக்டர்."

    டாக்டர் தாமோதரனுடைய சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

"சரிப்பா இந்த பொண்ணு பிரக்னண்டா இருந்திருந்தா எப்படியும் அரசாங்கத்துல பதிவு செஞ்சிருக்கும்,  நான் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு சொல்றேன், அப்புறமா அந்த பொண்ணை பஸ்ல ஏத்திக்கோ சரியா?..."

    "ரொம்ப நன்றி டாக்டர், நல்ல வேளை என்னை காப்பாத்துனீங்க. நீங்க போன் பண்ணி உறுதி செஞ்சதற்கு அப்புறமா, அந்த பொண்ணை பஸ்ல ஏத்திக்கிறேன்."

  டிராவல்ஸிலிருந்து காருக்கு வந்ததும், முதல் வேலையாக நாகலிங்கத்திற்கு போன் செய்து, அவன் மூலம் சிவாவிற்கு விஷயத்தை தெரியப்படுத்தினான் டாக்டர் தாமோதரன். விஷயம் கேள்விப்பட்ட நாகலிங்கம் இதை ரேகாவிடமும் பகிர்ந்து கொண்டான்.

  வீட்டிற்கு வந்த சிவாவிடம் ரேகா அதைப்பற்றி பேச தொடங்கினால்,

    "மாமா, ஒருவேளை அவளுக்கு நம்ம ரெண்டு பேரோட விஷயம் தெரிஞ்சிருச்சோ???."

    "அப்படி தெரிஞ்சிருந்தா, நம்ம கிட்ட  நேரா வந்து சண்டை போட்டிருப்பா?.. அவளுக்கு அதையும் தாண்டி வேற ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு, அதனால தான் அவளால மட்டும் இங்க தனியா நின்னு போராட முடியாதுன்னு, இங்க இருந்து தப்பிச்சு ஓட பாக்குறா."

  "இப்போ என்ன மாமா பண்றது?"

    "ம்ம்ம்......சித்ராவுக்கு சித்ரா பௌர்ணமி அன்னைக்கே நாள் குறிச்சிட வேண்டியதுதான்."


No comments:

Post a Comment