அத்தியாயம் - 01
பிரபலமான அந்த காபி ஷாப்பில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஆடவன் பேசுவதை பல்லை கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி தேவி.
குடும்பத்தார்களின் முன்னிலையில் பொது இடத்தில் வைத்து அவளுக்கு பெண் பார்க்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.
சுற்றி தனது குடும்பத்தார் மட்டும் அங்கு இல்லை என்றால் அவன் பேசும் பேச்சிற்கு, வைஷ்ணவி நிச்சயமாக அவனது மூக்கை உடைத்திருப்பாள்.
"ஆமா உனக்கு எவ்வளவு மணி நேரம் வொர்க்கிங் ஹவர்ஸ்? சைக்கார்டிஸ்ட்டா இருக்கறதால எப்படியும் ஒரு பேஷன்ட்க்கு ஐஞ்சாரு சிட்டிங் போடுவாங்க இல்லையா?
ஒரு சிட்டிங்க்கு மருந்து மாத்திரை எல்லாம் சேர்த்து மூனாயிரம் கிட்ட வருமா?
எப்படியும் சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டல் உங்களுக்கு தேவைப் படாது, சோ மார்னிங் ஒன்னு ஈவினிங் ஒன்னுன்னு இரண்டு ஹாஸ்பிட்டல்ல கூட வொர்க் பண்ணலாம் இல்லயா? அதனால பணமும் நிறைய வரும்.
என் பிரண்ட் ஐ டீ கம்பெனி தான் வெச்சிருக்கான், அவங்க ஸ்டாப்ஸ்க்கு சிக்ஸ் மன்த்ஸ் ஒன்ஸ் மைண்ட் ரிலாக்க்ஷேன்க்காக கேம்ப் மாதிரி அரேஜ் பண்ணு வாங்க . அங்க இனி உன்னையவே அப்பாயின்ட் பண்ண சொல்லறேன், உனக்கு அது மூலமாகவும் நிறைய கஷ்டமர்ஸ் கிடைப்பாங்க இல்லையா? அப்பறம்...."
வந்ததிலிருந்து நிறுத்தாமல் இதே போன்று பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு அவன் பேசிக் கொண்டிருக்க, வைஷ்ணவியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில் பெரியவர்களும் அவர்கள் அருகில் வந்து இருவரின் விருப்பத்தை பற்றிக் கேட்க, சந்துருவே விரைவில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மறுமொழி கூறினான்.
ஒரு பேச்சுக்குக்காக கூட வைஷ்ணவியிடம் அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமா என்று அவனுக்கு கேட்கத் தோன்றவில்லை.
அதுவே வைஷ்ணவியின் தந்தை சேகருக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அவரது மனைவி லீலாவதி அவரின் முக மாறுதலை கூட கவனிக்காமல் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று மணமகன் வீட்டாரோடு பேச ஆரம்பிக்க,
"ஒரு நிமிஷம் ம்மா இன்னும் நீங்க என்கிட்ட இந்த கல்யாணத்துல சம்மதமான்னு ஒப்பீனியன் கேட்கவே இல்ல?"
" இதுல கேக்குறதுக்கு என்ன இருக்கு வைஷு? கண்ணுக்கு நிறைஞ்ச மாப்ள, கை நிறைய சம்பாத்திக்கிறாரு, நல்ல கௌரவமான குடும்பம்."
"லீலா பணமும் அழகும் எப்பவும் வாழ்க்கை பூராவும் கூட வரப் போறதில்லை. வாழப் போறது வைஷு தான், அதனால அவள பேச விடு, நீ சொல்லுமா."
தனது தந்தைக்கு புன்னகையை பதிலாக கொடுத்தவள் சந்துருவை நோக்கி திரும்பினாள்.
"மிஸ்டர் சந்துரு நீங்க உங்க வாழ்க்கைக்கான ஒரு துணையை தேடி இங்க வரல, உங்க பொருளாதார நிலையை உயர்த்தரதுக்கு தொழில்முறை பார்ட்னரை தேடி வந்திருக்கீங்க.
நிச்சயமா உங்களுக்கான துணையா அங்க என்னால நிக்க முடியாது, ஏன்னா நான் தேடிட்டு இருக்கிறது என் மனசைப் பார்த்து வர்ற வாழ்க்கை துணையை தான், சோ சாரி எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல."
ஏற்கனவே வைஷ்ணவியின் அன்னை பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அவளது தந்தை பேசிய விதத்திலேயே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சந்துரு, வைஷ்ணவி பேச்சிய பேச்சில் அவமானத்தால் முகம் சிவந்து போனான்.
"அப்பா பணம் ஒன்னை மட்டுமே முக்கியமா நினைச்சு பேசறவங்க, சுயநலத்தோட செயல்பட்டு தன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு கஷ்டத்தை மட்டும் தான் கொடுப்பாங்கன்னு, நீங்க சொல்லி இருக்கீங்க இல்ல . இவர் வந்ததிலிருந்து அந்த பணத்தை பத்தி மட்டுமே தான் பேசிட்டு இருக்காரு.
இவருக்கு லைஃப் பார்ட்னர் தேவையில்ல ப்பா, அவரோட தொழிலுக்கு பினான்சியல் லெவல்ல அவருக்கு உதவியா இருக்கற, பார்ட்னர் தான் தேவை.
கண்டிப்பா என்னால அப்படி இருக்க முடியாது. நான் செஞ்சது சரிதானே ப்பா?"
அவளது தந்தை பெருமையாக அவள் தலையை தடவி விட, அவளிடம் கோபமாக பேச வந்த அவள் அம்மாவை தடுத்து நிறுத்திய வைஷ்ணவியின் தந்தை சேகர்.
"சரிடா குட்டிமா உனக்கு ஹாஸ்பிட்டலுக்கு லேட் ஆச்சு நீ கிளம்பு, நாங்க பார்த்துக்கறோம்"
"ரொம்ப தேங்க்ஸ் ப்பா."
யாரையும் கண்டு கொள்ளாமல் தனது கை பையோடு, பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வைஷ்ணவி தேவி
No comments:
Post a Comment