Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, October 16, 2025

பிம்பம் 16

 


அத்தியாயம் 16


    மெய்காரன் பட்டியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. அதனால் அந்த ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் ரேகா எப்போதும் சாந்தியுடனே சித்ராவின் வீட்டிலேயே இருந்தால்.

  இப்போதெல்லாம் அவள் சித்ராவை கண்டு கொள்வதில்லை, நாளை சித்ரா பௌர்ணமிக்காக கோயிலில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது நடத்தக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தாலும், ஊர்காரர்கள் இது சாமிக்கு செய்ய வேண்டிய ஒன்று என்று கூறி அனுமதி பெற்று இருந்தனர். அரசாங்கம் குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆட்கள் கலந்து கொண்டு திருவிழாவை நிறைவேற்றுமாறு அனுமதி வழங்கியது. இருந்தும் ஊரார் அனைவருமே அதில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருந்தனர்.

  சித்ராவிற்க்கு நடந்த விஷயங்களையே நினைத்துக் கொண்டிருந்தால், நிஜமாகவே பைத்தியமாகி விடுவோமோ என்ற அச்சம் தோன்றியது. அதனால் தன்னை வேலைகளுக்குள் மூழ்கடித்துக் கொண்டாள்,  வீட்டு வேலைகளை அவளே செய்ய ஆரம்பித்தால், மதிய நேரங்களில் கதை படிப்பதும், கூடை பின்னுவதும், குழந்தைக்கான ஸ்வட்டரை பின்னுவதுமாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். 

ரேகா அன்று சாந்தியின் வீட்டில், ஹாலில் அமர்ந்து மும்மரமாக கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவளுக்கு சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர்ந்து, சித்ரா குழந்தைக்கான ஸ்வட்டரை பின்னிக் கொண்டிருந்தாள். 

  சித்ரா முதலில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் போது, கணினி அவர்களது அறையில் தான் இருந்தது. ரேகா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, சித்ராவிற்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று கம்ப்யூட்டரை ஹாலுக்கு மாற்றி விட்டான் சிவா.

  சாந்தி திருவிழா பலகாரங்கள் சுட ரேகாவை உதவிக்கு அழைத்தார், ரேகா அவளது போனை, கம்ப்யூட்டர் அருகே வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

  சிறிது நேரத்தில் ரேகாவின் போன் அலற தொடங்கியதது,மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்ததால் ஏதாவது அவசரமாக இருக்கும் என்று நினைத்த சித்ரா, போனை ரேகாவிடம் எடுத்துக் கொடுக்க கணிப்பொறியின் அருகே வந்தவள் அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள், ஏனென்றால் கூப்பிட்டுக் கொண்டிருந்தது சிவப்பிரகாஷ். அவனோடு நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோவை தான், போனில் இமேஜாக அவனுக்கு செட் பண்ணி இருந்தால் ரேகா, அத்தோடு அவனது பெயரை ஹஸ்பண்ட் என்று போனில் பதிந்திருந்ததை கண்டு, அதிர்ந்து போய் நின்று விட்டால் சித்ரா, ரேகா வரும் சத்தம் கேட்டு, உடனே அருகில் இருக்கும் தமது அறைக்குள் சென்று, மறைந்து நின்று கொண்டாள்.

  போனை எடுத்த ரேகா சுற்றிமுற்றி யாராவது இருக்கிறார்களா என்று  பார்த்துவிட்டு, அங்கே சித்ரா இருப்பது தெரியாமல் அங்கேயே நின்று பேச ஆரம்பித்தால்.

    "என்ன மாமா நான் இங்க இருக்கும் போது, அதிசயமா கூப்பிடுறீங்க?"

.......

    "என் வீட்ல இருக்கீங்களா? சரி இருங்க, அத்தை கிட்ட ஏதாவது சொல்லிட்டு உடனே அங்க வரேன்."

........

    கேட்டுக் கொண்டிருந்த சித்ராவிற்கு தலை சுற்றியது, இதயம் சற்று  அடைப்பது போல் இருக்க கஷ்டப்பட்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள், ஒருவேளை தன்னை பைத்தியம் ஆக மாற்ற ரேகா எடுத்து கொண்ட முயற்சியில் தனது கணவனுக்கும் பங்கு உண்டோ என்று சந்தேகிக்க தோன்றியது.

  தாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று உள்ளம் குமைந்தவள், பழைய சித்ராவாக மாறி, கோபத்தோடு ரேகாவின் வீட்டை நோக்கி பின் வாசல் வழியே சென்றால்.

  ரேகாவின் வீட்டை அவள் நெருங்கும் போதே, ரேகாவோடு அவள் கணவன்  சிவா சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. திறந்திருந்த  ஜன்னல் வழியே பார்த்தவள் சிலையாகி போனால்.

  வயிற்றில் கருவினை சுமந்துகொண்டு காணக்கூடாத காட்சியை கண்டு கொண்டிருந்தால், தன்னைத் தொட்டு தாலி கட்டியவன் இன்னொருத்தியோடு நெருக்கமாக இருப்பதை,  உயிருக்குயிராய் வளர்த்த பெற்றோரை கூட இவன் மீது காதல் கொண்ட காரணத்தால் உதறிவிட்டு வந்தேனே? இதை பார்க்கவா?.... எனக்கு துரோகம் செய்ய எப்படி இவர்களால் முடிந்தது.    

  சித்ரா அங்கு நின்று கொண்டிருக்கும் போதே, அவர்கள் பேச்சில் தனது பெயர் அடிப்படுவதை கண்டு, கண்களை துடைத்துக் கொண்டு அதை கவனிக்க ஆரம்பித்தால்.

  "என்ன மாமா? எப்பவும் ராத்திரி, உன் பொண்டாட்டி குடிக்கிற பால்ல மயக்க மருந்து கலந்து கொடுத்துட்டு தான் என்னை பார்க்க வருவே, பகல்ல எப்பவும் உன் ஆசை பொண்டாட்டி பின்னாடி தானே சுத்துவே?.... இன்னைக்கு என்ன அதிசயமா பகல்ல என் கிட்ட வந்திருக்க?"

  "அவளை எம் பொண்டாட்டியா ஆக்கினதே நீதானே டி? அப்பறம் என்ன? அவ சொத்துக்காக அவளை மடக்க அண்ணணும் தங்கச்சியும் பிளான் போட்டீங்க,... அது வொர்க் அவுட் ஆகல,... அதனால நான் உள்ள பூந்துட்டேன். அவளை கரெக்ட் பண்றதுக்காக மாரியை நடிக்க வெச்சேன், இப்போ தொடர்ந்து நானே அவகிட்ட நடிச்சுக்கிட்டு இருக்கேன், சொந்த வீட்டிலேயே இன்னும் எத்தனை நாளைக்கு தான் நடிக்கறதோ?"

  "நான்தான் முதல்லையே சொன்னேனே மாமா, அவ ஒரு கறார் பேர்வழின்னு, என்ன..... நீ தான் கேட்கல. நீ இப்போ செஞ்சிட்டு இருக்க ப்ராஜெக்ட் மூலமாவே கோடிக்கணக்கில் பணம் வரும், அப்புறம் எதுக்காக அவ தான் வேணும் ஒத்தக்கால்ல நின்ன?"

    "நான் பண்ணிட்டு இருக்க ப்ராஜெக்ட்ல கோடி கணக்குல வருமானம் வரும் தான், ஆனா திடீர்னு போலீஸ் கேஸ்னு ஆச்சுன்னா?..... அரசியல் தான் நமக்கு பாதுகாப்பு.  அவளோட குடும்பம் அரசியல் பின்னணியைக் கொண்டது, அதன் மூலமா போனா சீக்கிரம் மேல வந்துடலாம் என்று பார்த்தேன். எங்க அவங்க அப்பன் தான் என்ன பண்ணாலும் சப்போர்ட் பண்ணவே மாட்டேங்கிறானே,.... நியாயவாதி மாதிரியே பேசுறான், அதனால தான் அவளை போட்டு தள்ளி சிம்பதி கிரியேட் பண்ணலாம்னு பார்க்கிறேன்,........ஆமா உன்கிட்ட அந்த ஆராய்ச்சி பத்தி கொடுத்ததெல்லாம் ஃபைல் பண்ணிட்டியா? நம்ம உடனே அதை மும்பைக்கு மெயில் அனுப்பனும். அதுக்கு போல்டர் போட்டு பாஸ்வேர்ட் சேவ் பண்ணிட்டியா?"

  "பண்ணிட்டேன் மாமா, அந்த ரிப்போர்டை எல்லாம் மெடிசன்னு பேர் போட்ட போல்டர்ல, உன் பேரையும் என் பேரையும் சேர்த்து, ரேகா சிவானு பாஸ்வேர்ட் செட் பண்ணி இருக்கேன்....... மாமா இப்போ கொரோனாவால செத்துட்டதா சொல்லி சமாளிச்சுட்டோம்..... ஒருவேளை இது கம்மியாயிடுச்சுன்னா ஆராய்ச்சிங்கிற பேர்ல, நாம பண்ற கொலைகளை கண்டுபிடிச்சிட மாட்டாங்களா?...... எனக்கு பயமா இருக்கு மாமா."

    "உனக்கு எதுக்கு பயம்?.... எப்படி இருந்தாலும் நம்ம ஊர்ல  போஸ்ட்மார்ட்டமை, டாக்டர் தண்டபாணி தான் பண்ணுவாரு, அவர் நம்ம கூட இருக்கும் போது நாம கொலையே செஞ்சு அனுப்புனா கூட, அதை தற்கொலை மாதிரி மாத்திடுவாரு.......எனக்கு இவளை தான் என்ன பண்றதுன்னு தெரியல???."

  "விடு மாமா, நம்ம திட்டப்படி ஊருக்குள்ள எல்லோரும், அவளை பைத்தியமுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, இனி அவளை  ஒரு வழி பண்ணிடுவோம்."

  சித்ராவால் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை, துரோகி என்று நினைத்தால் இவர்கள் கொலைகார கூட்டமாக அல்லவா இருக்கிறார்கள்?... தனக்கு ஒரு ஆபத்து என்றால் எதையும் நினைக்காமல் துணிந்து எதிர்த்து நின்று விடுவால்,..... ஆனால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தை நினைத்து  அச்சப்பட்டால். 

    என்ன ஆனாலும் இவர்களது உண்மையான சொரூபத்தை ஊருக்கு வெளிச்சம்  போட்டு காட்டியே தீர வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு, வந்ததே தெரியாதது  போல அங்கிருந்து தமது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

  அவள் வீட்டிற்கு வந்த நேரம் அவளது மாமியார் பக்கத்து வீட்டிற்கு பேசுவதற்காக வெளியே சென்று இருந்தார். இதுதான் சமயம் என்று நினைத்தவல், கணினியில் அமர்ந்து அந்த போல்டரை தேடி,  அதற்கு பாஸ்வேர்டை கொடுத்து உள்ளே சென்றவள், அதிலிருந்த தகவல்களை படித்த போது தான், இவர்கள் எவ்வளவு ஆபத்தான விஷயத்தை மக்களுக்குள் புகுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டாள். வெளியே யாரோ வரும் சத்தம் கேட்க அதிலிருந்த அத்தனை தகவல்களையும் தனது ஈமெயிலுக்கு காபி செய்து ட்ராஃப்டில் ஸ்டோர் செய்து கொண்டாள். பின்பு கணினியை ஆப் செய்துவிட்டு, தனது அறைக்குள் சென்று படுத்து விட்டால்.

    அறைக்குள் வந்த சிவா, இவள் படுத்திருப்பதைக் கண்டு என்ன ஆனது என்று பாசமாக விசாரித்து, அவன் கையால் அவளது நெற்றியை தொட வருவதற்குள், அவளே தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

  "இல்ல,..... எனக்கு ஒன்னும் இல்ல, கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருந்துச்சு அதுதான் படுத்துட்டேன்..... ஆமா நீங்க என்ன? இன்னைக்கு நேரமே வந்துட்டீங்க?"

" அதுவாம்மா? அது தான் திருவிழா ஆரம்பிச்சிடுச்சே,....நாளைக்கு சித்ரா பௌர்ணமி கோயில்ல ஃபுல்லா விசேஷமா இருக்கும். அதுக்கான வேலை எல்லாம் பாக்கணும் இல்ல, அதனால தான் மெடிக்கல் ஷாப்புக்கு இன்னைக்கும் நாளைக்கும் லீவு விட்டுட்டேன். சரி கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன், உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லு, இப்பவே டாக்டர் தாமோதரன் கிட்ட போயிட்டு வரலாம்."

  "வேண்டாம் வேண்டாம் சாதாரண தலை சுத்தல் தான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா சரியா போய்டும். நீங்க கிளம்புங்க."

  சிவாவும் அவளை நன்கு ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு குளித்து ரெடியாகி கோவிலுக்கு சென்று விட்டான். அவன் அந்த இடத்திலிருந்து சென்று விட்டான் என்பதை உறுதி படுத்திக்கொண்டு, சித்ரா தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றால், அவர்கள் சித்ராவின் உடல் நிலை சரியாக வேண்டும் என்ற காரணத்துக்காக, தமது குலதெய்வ கோயிலுக்கு பூஜை செய்ய சென்றிருந்தனர். அது போன் சிக்னல்கள் எதுவுமே கிடைக்காத, ஒரு அத்துவான காட்டுபகுதி.

    திரும்பத் திரும்ப தமது பெற்றோர்களுக்கு முயற்சி  செய்தவள் அவர்களின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகவே தெரிவித்துக் கொண்டிருக்க, சோர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள்.

  எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியேறியே ஆக வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினால். நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் ஊரில் உள்ள அத்தனை பேரும் கோயிலில் ஒன்றாக குழுமி இருப்பார்கள். அது தமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தவள், பக்கத்து ஊரிலிருந்து ட்ராவல்ஸூக்கு போனில் அழைத்து, டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்தால்.

மெய்க்காரன் பட்டியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால், இவளுக்கு டிக்கெட் கொடுக்க டிராவல்ஸில் தயங்கினர். அவள் தான் பிரசவத்திற்காக, தன் தாய் தந்தையரை சந்திக்க போவதாக கூறி, தனது மெடிக்கல் ரிப்போர்டையும் சேர்த்து அனுப்பி வைக்க, கர்ப்பமான பெண் என்பதால் டிராவல்ஸ் ஓனரும் அவள் நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துக்கொண்டார். 

  நாளை இரவு 8 மணிக்கு பஸ் கிளம்பும் என்று கூறி, டிக்கெட்டை புக்  செய்து விட்டதாக கூறினார். அவள் பணத்தை இங்கு பஸ் ஏற வரும்போது கொடுத்தால் போதும் என்றும் கூறினார். அவருக்கு நன்றிகள் பல கூறி நிம்மதியாக போனை வைத்தாள்.

  ஆனால் அவளின் நிம்மதிக்கும் அவளைப் போலவே ஆயுசு கம்மி என்று யார் கூறுவது?.... இந்த டிராவல்ஸ் ஓனரால்தான், அவள் தமது கணவனிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை...


No comments:

Post a Comment