Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, October 8, 2025

பிம்பம் 13

 


அத்தியாயம் 13


இன்று


  மும்பை நகரின் முக்கிய சாலையில் அமைந்த எம்.ஆர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்ட அந்த கண்ணாடி கட்டிடத்தில், கோட் சூட் மாட்டிய ஒருவன் அவனுக்கு முன்பிருந்த ஆட்களை தாறுமாறாக ஹிந்தியில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். இங்கு நமது வசதிக்காக தமிழாக்கம் செய்து கொள்வோம்.


    "ஒரு ஆர்டரை ஒருத்தனுக்கு குடுக்குறோம்னா, அவனோட பேக்ரவுண்ட் பத்தி எல்லாம் விசாரிக்க மாட்டீங்களாடா? அந்த நாகலிங்கம் போலீஸ்ல மாட்டிட்டான்னு சொன்னவுடனே எனக்கு இங்க உதற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ அவனை யாரோ கொன்னுட்டதா சொல்றாங்க, அவனைக் கொல்ல வந்தவனையும் போலீஸ் என்கவுண்டர் பண்ணினதா சொல்றாங்க, என்னதான்டா நடக்குது அங்க?"


  "இல்ல பாஸ் அந்த நாகலிங்கம் நாம சொல்றபடி தான் நடந்துட்டு வந்தான். அந்த டாக்டர் தாமோதரனை கூட  அவன் தான் கூட்டிட்டு வந்தான், அவரு அங்க இருக்கிற கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சீவ் டாக்டரா வொர்க் பண்றாரு, நம்ம வேலைக்கு இது ஈஸியா செட் ஆகும்னு தான் அவன்கிட்ட இந்த காண்ட்ராக்ட் கொடுத்தேன். ஆனா அவங்க ரெண்டு பேருமே இப்படி இறந்து போவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் மேல ஒருத்தன் இருக்கான், அவனோட ஆர்டர் படி தான் இவங்க நம்ம கூட டீலிங் வச்சுக்கிட்டாங்க பாஸ்."


   "அவனோட நம்பர் இருக்கா?"


"இ...இல்ல பாஸ், நாகலிங்கம் மூலமா தான் அவர் நம்மகிட்ட பேசிகிட்டு இருந்தார். அது அவனோட பாஸ்னு சொல்லி தான் அறிமுக படுத்தினான். இதுவரைக்கும் இரண்டு டைம் பேசி இருக்கார். மத்தபடி டீலிங்ஸ் எல்லாம் நாகலிங்கம் மூலமா தான் அவர் செஞ்சிட்டு வந்தார்."


    "முட்டாள் முட்டாள்,... அங்க நம்ம மருந்து கோடிக்கணக்குல மாட்டிக்கிட்டு இருக்கு,... இதுவரைக்கும் நாம எடுத்த சாம்பிள்ஸ் எவ்வளவுன்னு தெரியுமில்ல?.... இன்னும் இந்த ஆராய்ச்சியை கண்டினியூ பண்ணனும். இதை பாதியில விட்டோம்னா?... நமக்கு பணம் கொடுக்கிற வெளிநாட்டுக்காரனுக்கு என்னடா பதில் சொல்றது?..  இது பத்தி ஒரு வேளை வெளியே தெரிஞ்சது, நம்ம சாம்பல் கூட நம்ம குடும்பத்துக்கு கிடைக்காம மொத்தமா அழிச்சுடுவானுங்க."


"பாஸ் கேஸ் பத்தின ஃபைல் எல்லாம் நம்ம கிட்ட பத்திரமா இருக்கு."


"ஒன்னு செய், கற்பூரம் பத்த வெச்சு அதற்கு காமிச்சிட்டு, அந்த கற்பூரத்தை அதுக்குள்ளேயே போட்டு விடு. லூசு பயலே,... வெறும் பைலை வெச்சு நாம என்ன பண்றது?....  அந்த ஆளுங்க எல்லாம் வேற ஏதாவது டாக்டர் கிட்ட போனாங்கன்னா?... நம்ம மாட்டிப்போம்டா... அவங்களுக்கு தொடர்ந்து அந்த மருந்துகளை கொடுத்து, அந்த ஆராய்ச்சியோட முடிவை, அந்த வெளிநாட்டுக்காரங்களுக்கு ரிப்போர்ட் பண்ணனும் அது தெரியுமா இல்லையா உனக்கு?.... முதல்ல அந்த நாகலிங்கத்தோட பாஸ் யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு ஒரு போன் போடு."


  அந்த நேரத்தில் அவன் பி.ஏ வின் போன் சரியாகி அடித்தது. 


   "பாஸ் அந்த  நாகலிங்கத்தோட நம்பர்ல இருந்து தான்  பாஸ் கால் வருது. அவனோட பாஸ்ஸா தான் இருக்கும் "


   "போனை ஸ்பீக்கரில் போடு."


  "ஹலோ சார் உங்க போன்கால்காக தான் நாங்க காத்துகிட்டு இருந்தோம்."


  "மிஸ்டர் எம் ஆர், நீங்க நான் பேசுவதை கேட்டுட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். உங்களோட ஆராய்ச்சிக்கு எந்த பாதிப்பும் வராது அதுக்கு நான் பொறுப்பு. இங்க வேற ஒரு டாக்டரை செட் பண்ணிட்டேன், இங்க கொஞ்சம் சிச்சுவேஷன் சரியில்லை அதனால இனி மருந்து அனுப்புறதை மட்டும் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைங்க. இங்க இருக்கிற மருந்து வச்சு ஆராய்ச்சியை கண்டின்யூ பண்ணிக்கிறேன். ஒரு ஒன் மன்த்குள்ள எல்லாத்தையும் சரி கட்டிட்டு மறுபடியும் டிரான்ஸ்பர்மேஷன் வச்சுக்கலாம். கண்டிப்பா ஆராய்ச்சி பாதியில நிற்க்காது,... அதோட இது வெளியவும் தெரிய வராது."


"உன்னை எப்படி நம்புறது?"


  "இவ்வளவு நாள் எதை நம்பி இந்த ப்ராஜெக்டை எங்களுக்கு கொடுத்திருந்தீங்க சார்ர்...  வெளிநாட்டுல  கண்டுபிடிக்கிற புது புது மருந்துகளை இங்க இருக்க ஆளுங்க மேல டெஸ்ட் பண்ணி, அதோட ரிப்போர்ட் எடுத்துக் கொடுக்க தமிழ்நாட்டுல எந்த ஊர்ல முன் வந்தாங்க???. இந்த ஆராய்ச்சியால் இங்க மூணு பேரு இறந்து போய் இருக்காங்க,... ஆனா அவங்க சாவை இயற்கையா நடந்ததா மாத்தி இருக்கேன். இந்த ப்ராஜெக்ட்ல ஆல்ரெடி பாதி வேலை நல்லபடியா  முடிஞ்சு கொடுத்துட்டேன், இதுக்கு மேல சந்தேகமா இருந்தா?.... நீங்க வேணும்ணா வேற பார்ட்டி பார்த்துக்கோங்க, பாய்"


"இல்ல இல்ல, உங்க ஆள் போலீஸ்ல மாட்டிக்கிட்டதா கேள்விப்பட்டேன் அதுதான்?...."


  "அவனை நேத்தே ஆல் வச்சு க்ளோஸ் பண்ணிட்டேன், இங்க டாக்டர் யூஸ் பண்ண அந்த ஆதாரத்தையும் போலீஸ் கைக்கு கிடைக்காத மாதிரி தூக்கிட்டேன்."


  "ஓகே ஓகே நான் உங்களை நம்புறேன். ஆராய்ச்சி மட்டும் கரெக்ட்டா நடக்குற மாதிரி பாத்துக்கோங்க, அண்ட் அதோட ரிசல்ட் மறக்காம அப்டேட் பண்ணிருங்க. நாங்க உங்களை இந்த நம்பர்லையே காண்டாக்ட் பண்ணலாமா?"


    "நோ நான் உங்களுக்கு தெரியணும்ங்குறதுக்காக தான், இந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டேன், கூடிய சீக்கிரம் நானே புது நம்பர்ல உங்களுக்கு கூப்பிடுறேன், இந்த நம்பரை இனி யூஸ் பண்ணாதீங்க பாய்."

   

    விக்ரமும் ஜனாவும் அந்த அர்த்த ராத்திரியில், அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருந்த பிணவறைக்கு, பதுங்கிப்  பதுங்கி யாரும் பார்க்காதவாறு  சென்று கொண்டிருந்தனர்.


  "பாஸ் இது உங்களுக்கே நல்லா இருக்கா?.... ஒரு பச்ச குழந்தையை இப்படி அடிச்சு, அர்த்த ராத்திரியில மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு போறீங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா பாஸ்?"


  "நீதான் பேய் ப்ரோவாச்சேடா, அப்புறம் என்ன உனக்கு பயம்?"


  "எதே? பாஸ் அன்னைக்கு அந்த பேயை பார்த்ததுல இருந்து, நைட்ல பாத்ரூம் போக கூட நான் ரூமை விட்டு வெளியே வர்றது இல்லை தெரியுமா?... இப்போ என்னை இங்க..... கூட்டிட்டு வந்து நிறுத்தி இருக்கீங்க,.... நாளைக்கு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னோட அப்பா அம்மாக்கு யாரு பாஸ் பதில் சொல்லவா?"


  "அதெல்லாம் அவங்க உன்ன பத்தி கவலைப்பட மாட்டாங்க, உன்னை என் கூட ஊருக்கு அனுப்பும் போதே, தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு இவனை வீட்டு பக்கம் கூட்டிட்டு வந்துடாதேன்னு சொல்லித்தான் அனுப்பினாங்க."


அவர்கள் மார்ச்சுவரி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தார்கள். ஜனாவின் கண்கள் பயத்தை பிரதிபலிக்க, விக்ரமின் கண்கள் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தது.


    "டேய் சும்மா பயந்துகிட்டே நிற்காம ஏதாவது வித்தியாசமா கிடைக்குதான்னு போய் பாரு போ,.... ஒரு சின்ன க்ளு கிடைச்சா கூட போதும் இந்த கேஸை சால்வ் பண்ணிடலாம்."


  "இங்க வித்தியாசமா வேற என்ன பாஸ் கிடைக்கும்?.... விதவிதமா பிணங்களைத்தான் படுக்க வெச்சிருக்காங்க,.... முதல்ல நாம வந்தது சித்ரா கேஸ்காக?... சரி அதுதான் முடிக்கல, செத்துப்போன அந்த ரேகா பொண்ணு விஷயம் என்ன ஆச்சு? நீங்க சொன்னீங்கன்னு அவளோட போன் ஹிஸ்டரியை கொண்டு வந்து கொடுத்தேன், இப்போ அதை பத்தி விசாரிக்காம எதுக்காக இந்த டாக்டரை புடிச்சிட்டு  தொங்கறீங்க? இந்த கொலைக்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்?"


  "சம்பந்தம் தானே ஸ்ட்ராங்கா இருக்கு,.... டாக்டர் கிட்ட இருந்து கிடைச்ச சிம் கார்டுக்கு, இன்னொரு அண்ஆர்தரைஸ்ட் நம்பர்ல இருந்து கால் வந்து இருக்குன்னு சொன்னேனே, அந்த நம்பருக்கு தான் ரேகா சாகறதுக்கு முன்னாடி கடைசியா போன் பண்ணி பேசி இருக்கா,.... இந்த சம்பந்தம் போதுமா? வாயை ரொம்ப நேரம் திறந்து வைக்காதே?... ஏதாவது ஆவி உள்ள பூந்திட போகுது?.. வாய மூடிட்டு வேலைய பாருடா."


  அப்போது பிணவறைக்கு வெளியே ஏதோ பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதிலிருந்து இரண்டு மூன்று ஆட்கள் மார்ச்சுவரியை நோக்கி நடந்து வருவது போல் சத்தம் கேட்டது. உடனே விக்ரமும் ஜனாவும் மார்ச்சுவரியில் பிணங்களோடு பிணங்களாக ஸ்ட்ரக்சரின் மீது ஏறி  படுத்துக் கொண்டனர்.


அன்று


  இளநீரில் மருந்து கலந்துள்ளது தெரியாமல், சித்ரா அதை முழுவதுமாக குடித்துவிட்டாள். ரேகாவை மெயின் ரோட்டில் இறக்கி விடுவதாக கூறி அவளையும் உடன் அழைத்துக் கொண்டே காரில் ஏறினர் சித்ராவும் அவளது அம்மாவும்.


  அவர்கள் மூவரும் காரின் பின்புறம் அமர்ந்து கொள்ள, டிரைவர் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திலேயே சித்ராவின் அன்னைக்கு போன் வர, அவர் அதில் மும்மரமாக பேசிக் கொண்டிருந்தார்.


    டிரைவரும் ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, சித்ராவின் கண்கள் சிறிது நேரத்திலேயே நிலை குத்தி நின்றன, அதைப் புரிந்து கொண்ட ரேகா, சித்ராவின் காதருகே குனிந்து கட்டளைகளை இட ஆரம்பித்தால், அவள் இறங்கும் இடம் வந்ததும் சிரித்துக் கொண்டே சித்ராவின் அம்மாவிடமும் சித்ராவிடமும் கூறிவிட்டு ரேகா இறங்கிக் கொண்டாள்.


    வீட்டை அடைந்ததும் டிரைவர் கதவை திறந்து விட, சித்ரா இறங்கி நேராக சமையலறையை நோக்கிச் சென்றாள். அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி வெட்டும் கத்தியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி அதை வெட்டுவதற்காக கையை ஓங்கினாள், ஆனால் அதை அவளின் பின்னே வந்த அவளது தாயார், கைகளை வெட்ட விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். 


  அவரை தள்ளி விட்டுக் கொண்டு,சத்தமாக சிரித்துக் கொண்டே மறுபடியும் தனது கைகளை அவள் ஓங்க அவளை வெட்ட விடாமல் அங்கிருந்த வேலை ஆட்கள் பிடித்துக் கொண்டனர். சரியாக அந்த சமயம் அவளது தந்தையும் வந்து விட்டார்.


சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைவரும் சேர்ந்து அவளது கைகளை பிடித்து ஒரு துணியால் கட்டி, அவளை சமாளித்து கொண்டே ஒரு அறைக்கு கூட்டிச் சென்று விட்டனர். அவர்கள் இத்தனை செய்த போதும், சித்ரா வெறிபிடித்தவள் போல சத்தமாக சிரித்துக் கொண்டே தான் இருந்தால், ஒரு கட்டத்தில் மயங்கி அப்படியே கட்டிலில் சரிந்து விட்டால்.


   அவளது இந்த மாற்றத்தை கண்டு  அவளின் பெற்றோர் பயந்து விட்டனர். உடனே அவளின் தந்தை மருத்துவருக்கு அழைத்து விட்டார்.


  மருத்துவர் வந்து பார்த்து அவளை நன்கு பரிசோதித்து விட்டு, அவளுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நல்ல மனநல மருத்துவரை சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி சென்றார்.


    தமது ஆசை மகளின் இத்தகைய நிலையை எண்ணி வருந்திய அவளது பெற்றோர்கள், அடுத்த நாளே அவள் எவ்வளவோ மறுத்து கூறியும், அதனை கருத்தில் கொள்ளாமல், அந்த ஊரிலேயே பிரபலமான மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றனர். விஷயம் கேள்விப்பட்டு கோபமாக மருத்துவமனைக்கு வந்த சிவா, சித்ராவின் பெற்றோர்களிடம் கத்த தொடங்கினான்.


  "என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?..

என் பொண்டாட்டியை பைத்தியம்னு நினைச்சிட்டீங்களா? அவ நார்மலா தான் இருக்கா,... நான் தான் சொன்னேன் இல்ல, இது பிரக்னண்டா இருக்குற டைம்ல வர்ற ஹார்மோன் சேஞ்ச் தான்னு. அது புரியாம அவளை இப்படி சைக்காடிஸ்ட் கிட்ட கூப்பிட்டு வந்து இருக்கீங்க? அவள பைத்தியம் ஆகிடலாம்னே முடிவு பண்ணிட்டீங்களா?.. நான் சித்ராவை இப்பவே என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்."


No comments:

Post a Comment