அத்தியாயம் 8
இன்று
அந்த பௌர்ணமி இரவு பொழுதில் விக்ரம் புளிய மரத்தின் அருகே கண்காணிக்க செல்ல, ஜனா சிவாவின் கொல்லை புறத்தையும், நாகலிங்கத்தையும் கண்காணிக்க சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தான். விக்ரம் நினைத்தது போலவே, சிவாவின் வீட்டை விட்டுவிட்டு ரேகாவின் வீட்டை நோக்கித்தான் முதலில் ஜனா சென்றான்.
ரேகா தனது அத்தை சாந்தியிடம், தான் இன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு வந்து விட்டால். சிவாவின் மெடிக்கல் ஷாப்பில் இருந்து எடுத்து வந்த மாத்திரைகளை முதலில் முழுங்கியவள், பிறகு போனில் யாருக்கோ அழைத்து தீவிரமாக பேசத் தொடங்கினாள். அப்போதுதான் ஜனாவும் ரேகாவை நோட்டம் விடத் தொடங்கினான்.
"ஹலோ நான் தான்."
" "
"அதெல்லாம் மாத்திரை போட்டுட்டேன், இங்க பாருங்க இதுக்கு மேல மறுபடியும் இதே மாதிரி என்னை பண்ண வைக்காதீங்க சொல்லிட்டேன்."
" "
"புரியுது இதுல எனக்கும் பங்கு இருக்குது தான், இருந்தாலும் இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் இருக்கிறது? எப்ப தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கீங்க?"
" "
"புரியுது, ஆனா இந்த மாதிரி மறுபடியும் என்னை கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட வைக்காதீங்க."
" "
" சரி சரி நீங்க பாருங்க."
கேட்டுக் கொண்டிருந்த ஜனாவிற்கு திக்கென்று ஆனது, அடிப்பாவி கரெக்ட் பண்ணலாம்னு வந்தா, இவ வயித்துல இருக்க குழந்தையை கலைக்க மாத்திரையை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா? என்று அவன் மனதில் எண்ணிக்கொண்டான்.
"இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ரகசியமாக வாழ்க்கை நடத்துறது? வர்ற கோபத்துக்கு அவனை குத்தி கொன்னுடலாமான்னு கூட தோணுது."
நான் வேணும்னா அதுக்கு உதவி பண்ணட்டுமா?
திடீரென்று தனது தலைக்கு மேலே கேட்ட சத்தத்தில், ரேகா அண்ணார்ந்து பார்க்க, அங்கு தலைகீழாக சித்ரா இவளைப் பார்த்தபடியே, உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.
சித்ராவை பார்த்த ரேகா பயந்து போய் அப்படியே தரையில் விழுந்தால்,
" சி… சி…. சித்ரா நீ.. நீயா? நீ எப்படி இங்க? அதுவும் உத்திரத்துல?"
என்னை உத்திரத்துல தானே கட்டி தொங்க விட்டீங்க? அப்புறம் நான் வேற எங்கு தொங்கறது?
"சித்ரா என்னை எதுவும் பண்ணிடாத, ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத நான் கர்ப்பமா இருக்கேன் எனக்குள்ள குழந்தை இருக்கு."
ஏன் நீங்க எல்லாரும் என்னை கொலை செஞ்ச போது, என் வயித்துல குழந்தை இல்லையா? நான் எவ்வளவு கதறுனேன்? அதுல ஒரு வார்த்தையாவது கேட்டியா? ஆமா எப்ப இருந்து உன் வயித்துல வளர்ற குழந்தை மேல, இப்படி திடீர்னு பாசம் வந்தது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அந்த குழந்தையை கலைப்பதற்கு தானே மாத்திரை போட்டே?
சித்ரா உத்திரத்தில் இருந்து படிப்படியாக தொங்கிக் கொண்டே கீழே வந்தாள். கண்களின் சிவப்பு நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, ரேகாவை நெருங்கினால்,
" சித்ரா ப்ளீஸ் என்னை விட்டுடு, எனக்கு எதுவுமே தெரியாது, நான் வேண்டான்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்கல ப்ளீஸ் என்ன விட்டுடு."
ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் சரியாக அந்த நேரம் வாசல் கதவை திறந்து கொண்டு, கீ கொடுத்த பொம்மை போல அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தான்.
ரேகா அவனை அழைக்க அழைக்க, காது கேளாதவன் போல் சமையல் கூடத்திற்குள் நுழைந்தவன், ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ரேகாவை நெருங்கினான். அவனது கண்கள் வழக்கத்துக்கு மாறாக நேர்குத்தி இருந்தது.
" அண்ணே என்ன பண்ற? என்னை பாருண்ணே, நான் உன் தங்கச்சி."
உங்க அண்ணனால எப்படி ரேகா பார்க்க முடியும்? அவன்தான் அன்னைக்கு நான் நடைபிணமா தெரியணும்னு குத்துனானே, அதே ஊசியை தானே இப்போ அவனும் குத்தி இருக்கான். அதனால நான் சொல்றதை மட்டும் செய்யற பொம்மையா தான் இருப்பான்.
உனக்கு தெரியாததா? இந்த மருந்து அவன் உடம்புல இருக்குற வரைக்கும் இப்படித்தான் இருப்பான்னு, உங்க அண்ணே செஞ்ச பாவத்துக்கும், உனக்கு அண்ணனா பொறந்த பாவத்துக்கும் சேர்த்து, உன்னை இந்த கத்தியால குத்திட்டு ஜெயிலுக்கு போக போறான். அங்க பைத்தியமாவே மாறி, தூக்கு போட்டுகிட்டு தன் உயிரை விடப் போறான்.
நாகலிங்கம் தப்பித்த ஓட முயன்ற ரேகாவை பிடித்து அவளின் வயிற்றில் ஓங்கி ஓங்கி கத்தியால் குத்தினான். ரேகாவின் அலறல் அங்குள்ள நாய் மற்றும் கோட்டான்களின் ஒலியோடு சேர்ந்து, அந்த இடத்தையே மயான பூமியாக மாற்றியது.
இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தான், ஜன்னலுக்கு வெளியே இருந்த இவனை திரும்பிப் பார்த்த சித்ரா,
தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப் பிரதர்
என்று கூறிவிட்டு மறைந்து போனாள், அடுத்த நிமிடமே ஜனாவும் அப்படியே மயங்கி சரிந்தான்.
அடுத்த நாள் லாக்கப்பில் இருந்த அவனைப் பார்க்க வந்த விக்ரமிடம், நடந்த அனைத்தையும் கூறியவன்,
"பாஸ் என்னை அநியாயமா இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து, இப்படி என்னை பேய்க்கு பிரதர் ஆக்கிட்டீங்களே பாஸ்? இது உங்களுக்கே நல்லா இருக்கா?"
"சரிடா சரிடா அந்த பொண்ணு ஒன்னைய பிரதராதானே சொல்லுச்சு, என்ன உன்னையும் சேர்த்து பேயவா மாத்திடுச்சு?"
"எதே? யோவ் பாஸு மரியாதையா என்னை ஊருக்கு கொண்டு போய் விடுயா, எங்க அப்பா அம்மாக்கு ஒரே புள்ளையா நானு."
"எது மரியாதையாவா?"
"பாஸ் பாஸ் பயத்துல கொஞ்சம் ரெஸ்பெக்ட் குறைஞ்சிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணி, என்னை முதல்ல எப்படியாவது வெளியே எடுங்க பாஸ்."
விக்ரம் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தங்களது அடையாளங்களை காட்டி, சித்ராவின் கொலை சம்பந்தமான இன்வெஸ்டிகேஷன்காக வந்திருப்பதாக கூறவும் தான், ஜனாவை வெளியே விட்டனர்.
பிறகு விக்ரமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், சித்ராவின் கேஸ் ஃபைலை அவனிடம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த, கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், அவர் உபயோகப்படுத்தும் மருத்துவ உபகரணங்களால், தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வர, அனைவரும் அங்கே விரைந்தனர்.
அன்று
சித்ரா கத்த தொடங்கவும் அவளது வாயை பொத்திய சிவா,
"ஐயோ சித்து ஏன் கத்துற? அம்மா வந்திட போறாங்க, நான் தான். அம்மா அங்க வெளிய பக்கத்து வீட்டில கதை பேசிட்டு இருந்தாங்க, என்னை பார்த்தா நான் ஊர்ல இல்லாதப்ப நடந்ததை எல்லாம் கதை கதையா சொல்வாங்க.
அப்பறம் உன்னை இப்போதைக்கு பார்க்க விட முடியாதுன்னு தான் மறைஞ்சு மறைஞ்சு வீட்டுக்குள்ள வந்தேன், உன்ன பாக்கலாம்னு ஆசையா ஓடி வந்தா நீ எங்க போன?"
"நீங்களா? பக்கத்துல ரேகா வீடு வரைக்கும் போயிருந்தேன். ஆமா நீங்க வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க?"
"ஆமா, ஆனா எனக்கு உன்ன பாக்கணும் போல இருந்துச்சு. அதோட என் குழந்தைக்கு ஒழுங்கா நீ சாப்பாடு கொடுக்கிறது இல்லையாமே? என் கனவுல வந்து கம்ப்ளைன்ட் பண்ணினான். அதனாலதான் நான் நேரா இங்கே ஓடி வந்துட்டேன், டேப்லெட் எல்லாம் இங்க அப்படியே இருக்கு, நீ என்னதான் சாப்பிடற? ஆமா ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமெல்லாம் வாடி போய் இருக்கு ?முதல்ல கிளம்பு டாக்டரை போய் பார்த்துட்டு வரலாம்."
சித்ராவிற்கு ரேகாவின் வீட்டில் தான் கண்டதை சிவாவிடம் கூற மனம் வரவில்லை, ஒருவேளை தான் தெரியாமல் கூட இவ்வாறு நினைத்திருக்கலாம், எதற்காக வீணாக ஒரு கல்யாணமாகாத அப்பாவி பெண்ணின் மீது பழி விழ வேண்டும் என்று, அதைப் பற்றி அவள் யாரிடமும் கூற விரும்பவில்லை.
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நான் நல்லா தான் இருக்கேன், இப்ப சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடுவதற்கு மறந்துட்டேன், அவ்வளவுதான், இதோ இப்பவே போட்டுடறேன்."
"இதையெல்லாம் கூடவா மறப்பாங்க? சித்து...., உனக்கு உங்க அம்மாவை பாக்கணும்னு ஆசையா இருக்கா? இல்லே... இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க, தான் பொறந்த வீட்டுல இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, ஆனா எனக்காக தானே நீ உன் வீட்டை விட்டு வந்துட்டே.....அதுதான்.."
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, நீங்க என் கூட இருந்தா அதுவே எனக்கு போதும்."
"சரி நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு."
"சர்ப்ரைஸா என்னதுங்க அது?"
"அதுதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேனே, நாளைக்கு நீ துள்ளி குதிக்க போற பாரு, நாளைக்கு காலைல சாப்பிட்டு ரெடியா இரு, நம்ம வெளிய போக போறோம்."
அடுத்த நாள் காலையில் அவன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை பார்த்து சித்ரா அழுதே விட்டாள்.
No comments:
Post a Comment