Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, June 26, 2025

மன்னவரே 45


 

             அத்தியாயம் 45


  மதுவிடம்  விளக்கேற்ற சொல்லிவிட்டு, வீட்டு பெண்கள் அனைவரும் வரிசையாக வந்து அவள் நெற்றியில் திலகமிட்டனர். பிறகு பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமாறு கூறினர்.


  கடைசியாக வடிவுபாட்டி தன் கரங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும் அப்பெட்டியை எடுத்து, இதை பெற்றுக் கொள்ளுமாறு மதுவினை நோக்கி நீட்டினார்.


"மதும்மா இந்த பெட்டிய இவ்வளவு நாளும் என் பாதுகாப்பில் வைச்சிருந்தேன். இனி இது உன்னோட பொறுப்பு.


  என்னம்மா பாக்குற இது நம்ம  பிறந்த வீட்டிலிருந்து வாக்கப்பட்டு இந்த குடும்பத்துக்குள் வர மருமகளுக்காக,  நம்ம புகுந்த வீட்ல கொடுக்கிற ஒரு பொக்கிஷம்னே சொல்லலாம். இதை பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது இனி உன்னுடைய பொறுப்பு."


மது புரியாமல் திரும்பி வேந்தனை பார்க்க அவன் கண்களால் வாங்கிக்கொள் என்று சைகை செய்ததும், இவள் அதனை வாங்கிக் கொண்டால்.


  அவள் திருக்கரம் பட்டதும் பெட்டியானது உடனே திறந்து கொண்டது. இதை அங்குள்ளோர் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தலைமுறை தலைமுறையாக திறக்கப்படாமல் இருக்கும் பெட்டி, இப்போது திறந்து விட்டது என்றால் குலதேவி தன் இல்லம் திரும்பி விட்டார் என்று தானே அர்த்தம்.


    குலதேவி வருவாள் என்று கூறியதோடு,மோகினி பள்ளத்தில் இருக்கும் அந்த மாயக்கெட்ட சக்தியும் உயிர்த்தெழும் என்பது இவர்களின் முன்னோர் வாக்கு. அதனால் அனைவருக்கும் ஒருவித அச்சம் தோன்றியது.


மது இங்கு பெட்டியை தன் கரங்களில் வாங்கிக் கொண்ட அதே நேரம், அங்கு குருந்த மரத்தடியில் பூஜைகள் ஆரம்பமானது.


    மது தன் கையில் இருந்து பெட்டியை வடிவுப்பாட்டியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாள்.


  "இப்போதைக்கு இது உங்க கிட்டயே இருக்கட்டும் பாட்டி, இந்த வீட்டு மருமகளுக்கான நேரம் வரும்போது, இது கைமாறுனா போதும் அதுவரைக்கும் நீங்களே வெச்சிருங்க."


  குடும்பத்தார் இவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாமல் விழிக்க, மல்லிகா தான் முதலில் சுதாரித்து,


  "கவி, அண்ணி டயர்டா இருப்பாங்க, நீ அவங்களை அண்ணனோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா."

 

  வேந்தன் தனது பாட்டியிடம் இருந்து அப்பெட்டியை பெற்றுக் கொண்டவன்,


  "அது ஆத்தா...வீட்ல பெரியவங்க எல்லாம் இத்தனை பேர் இருக்கும் போது, எப்படி இந்த பொறுப்பை தான் ஏத்துக்கிறதுன்னு தான், உங்ககிட்டயே இதை கொடுத்துட்டு போயிட்டா. அவளுக்கு இத பத்தி தெளிவா தெரியாது இல்லையா, விடுங்க நான் இத பத்தி சொல்லி அவ கையில இதை கொடுத்துடறேன். இல்லயில்ல கையோட இந்த வளையலை போட்டே விட்டுடுறேன் போதுமா."


    அவன் பெட்டியை தூக்கிக் கொண்டு மேலே செல்ல, மூர்த்தி ராகுலுடன் வீட்டினுள் நுழைந்தான்.


  மூர்த்தி ஐயாவின் வீட்டில் சிம்பிளாக ஊர் மக்களுக்கு கல்யாண விருந்து வைப்பதற்காக ஏற்பாடாகி இருந்தது. அது சம்பந்தமாக பொருட்களை வாங்கிக் கொண்டு மூர்த்தி வந்து கொண்டிருக்கும்போது ராகுல் நடுரோட்டில் அடிபட்டு விழுந்து கிடப்பதை கண்டான்.


அவனை எழுப்பி, என்ன ஏது என்று விசாரிக்க, அவன் கூறிய செய்திகளை கேட்டு அதிர்ந்து போனான். உடனே அவனை அழைத்துக்கொண்டு மூர்த்தி தாத்தாவின் வீட்டை நோக்கி சென்றான்.


        ராகுல் நிரஞ்சனாவை காப்பாற்றியதையும் அவளை இங்கு அழைத்துக் கொண்டு வரும்போது ஏற்பட்ட இடர்களையும் பற்றி குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறினான். அதை கேட்டு ஆண்கள் அனைவரும் நிரஞ்சனாவே தேடிக் கிளம்ப, பெண்கள் தமது வீட்டுப் பெண்ணை காப்பாற்றுமாறு பூஜை அறையினை தஞ்சம் புகுந்தனர்.


    கவி மதுவை, வேந்தனின் அறையில் சென்று விட்டுவிட்டு கீழே வந்து விட்டாள். சாதாரண நேரமாக இருந்திருந்தால் மது இந்நேரம் கவியுடன் பேச்சு கொடுத்து, தோழியாகி இருப்பாள்.


    ஆனால் அவளே, கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் பாதிப்பால் மௌன அவதாரம் எடுத்து விட்டாளே.


    வேந்தன் அறையினுள் நுழையும் போது, மது ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு, வெளியே பார்வையால் வெறித்துக் கொண்டிருந்தாள்.


அரவம் கேட்டு மது திரும்பிப் பார்க்க, வேந்தன் கைகளில் உள்ள பெட்டியை கட்டிலின் மீது வைத்துக் கொண்டிருந்தான்.


"என்ன மிஸ்ஸஸ் மதுரம் கல்யாணம் ஆகி கிடைக்கிற ஃபர்ஸ்ட் கிப்ட் இது, இதை போய் இப்படி வேண்டாமுன்னு சொல்லிட்டு வந்துட்டீங்களே."


  ஆஹா என்ன இது, அனல்  பார்வையால்ல இருக்கு. வேந்தா சமாளி விட்டுடாதே,


  "சரி உங்களுக்கு வேண்டாம்னா அதை வாங்கி, என் கையிலயாவது கொடுக்கலாம்ல. எனக்கும் இப்பதானே கல்யாணம் ஆயிருக்கு."


  "கிப்ட் தானே? இருங்க குடுக்குறேன்."


    மது தனது பையில் இருந்து ஒரு கவரை எடுத்து, வேந்தனது கைகளில் வைத்தாள்.


  அதைப் பிரித்துப் பார்த்த வேந்தனுக்கு முகத்தில் ஈயாடவில்லை.


  "கிப்ட் கேட்டீங்களே, இதுதான் என்னால முடிஞ்ச, உங்களுக்கான கிப்ட். மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கேன். நான் ஆல்ரெடி இதுல சைன் பண்ணிட்டேன். நீங்களும் சைன் பண்ணா இதை சப்மிட் பண்ணிடலாம்."


    "என் குடும்பத்தோட கட்டாயத்தால தானே, நீங்க என் கழுத்துல தாலி கட்ட வேண்டியதா போச்சு. பெரியவங்க சொல்லை மீற முடியாமல் தானே நீங்க இதுக்கு சம்மதிச்சீங்க. எனக்காக நீங்க ஏன்  உங்க சந்தோஷத்தை விட்டுக் கொடுக்கணும். அதனால தான் இதுக்கு ஏற்பாடு பண்ணினேன்


      என்ன மிஸ்டர் எம்டீ சார், என் கிப்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கா?"


    வேந்தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


"வாவ் எனக்காக நீ இப்படி ஒரு கிப்ட் கொடுப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ கொடுத்துட்ட, உனக்கு நான் கொடுக்க வேண்டாம்."


  வேந்தன் தனது பாக்கெட்டில் கைவிட்டு பதக்கம் வைத்த ஒரு செயினை எடுத்தான்.


     "இதுதான் நான் உனக்காக குடுக்கற கிப்ட்."


    அது மது கனவில் பார்த்த அதே செயின். வேந்தன் அதை தன் கரங்களால் அவள் கழுத்தில் அணிவிக்கும் போது, மது தன்னை மறந்து கண்களில் நீர் சூழ வேந்தனை பார்த்து தீரா என்று அழைத்தால்,


  மதுவிற்கு திடீரென்று தனது கனவில் தோன்றிய அந்த வாளை வீசிக்கொண்டு வந்த உருவம் நினைவுக்கு வர, அவனுக்கு பின்னே ஜன்னலின் வழியே நோக்கினால்.


  அன்று கண்ட அந்த சுந்தர முகம் இன்று கருப்பு புகை சூழ, கண்களில் நெருப்பு போன்று ஒளி வீச, விகார தோற்றத்துடன் நாக்கு ஐந்து அடிக்கு கீழே சுழற்றிக்கொண்டு தொங்க, இவளை வெறித்துக் கொண்டிருப்பதை கண்டு மது மயங்கி சரிந்தாள்.

No comments:

Post a Comment