Search This Blog

Followers

Powered By Blogger

Monday, June 23, 2025

மன்னவரே 43


 

             அத்தியாயம் 43

 

          மாறனுக்கு அவர்களை கண்டு கோபம் வந்தாலும், தற்போது சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து, அங்கிருந்து உடனே வெளியேறி விட்டான்.


  உள்ளே வந்தவர்களை வரவேற்று அமர வைத்த மூர்த்தி தாத்தாவின் மகள்கள், அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவர உள்ளே செல்ல போக,


    "வேண்டாம்மா கொஞ்சம் இப்படி உட்காருங்க. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.


    எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. வேந்தனுக்கு திடீர்னு கல்யாணம் முடிஞ்சிடுச்சு மச்சான்.


  அவன் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பி இருக்கான் போல இருக்கு, என்ன பிரச்சனைன்னு தெரியல எங்க யாருக்குமே அவங்க கல்யாணத்தை பத்தி தெரியப்படுத்தவே இல்ல.


      எங்களுக்கா ஒரு கட்டத்துல இது தெரிய வந்தது. அதுதான் மாப்பிள்ளையும் பொண்ணையும் இன்னைக்கு ஊருக்கு கூட்டிட்டு வரப் போறோம்.


  மாப்ள நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, இது நாங்களே எதிர்பார்க்காதது தான்." 


    வீட்டில் உள்ளவர்கள் அவர் கூறுவதை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், கேட்கும் போது நிரஞ்சனாவை நினைத்து மனம் வருந்தினர்.


    "வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு யாருன்னா...?"


  "என் பையன் சிவராமனோட பொண்ணு சரிங்களா மாப்ள. என் பொண்டாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னா.


  இது எங்க வீட்டு கல்யாணம் தான். அவ என் பேத்தி தான், கண்டிப்பா பொண்ணு வீட்டுக்காரங்களா நாங்க  மணமக்களை வரவேற்க உங்க வீட்டுக்கு வர்றோம்."


  வேலப்பன் ஐயா தமது புதல்வர்களை திரும்பிப் பார்க்க, அவர்களும் இதை ஆமோதித்தனர்.


  வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை.


  எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று பதட்டத்துடன் தான், வேலப்பன் ஐயா வீட்டிற்கு மூவரும் வந்தனர். தீபனை தாத்தாவுடன் போகச் சொன்னது வேந்தன் தான். 


  மாறன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்று அவன் உறுதியாக நம்பினான். வந்த வேலை சுபமாக முடிந்ததை எண்ணி மகிழ்ந்தனர். 


  வேலை அதிகம் இருப்பதாக கூறி அவர்கள் உடனே கிளம்ப, வேலப்பன் ஐயா தானும் உடன் வருவதாக கூறி அவர்களுடன் கிளம்பி விட்டார்.


  ராகுல் ஒரு வழியாக மேலூரை நெருங்கிக் கொண்டிருந்தான். நிரஞ்சனா, தன் கூடு கண்ட பறவையாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.


  சென்று கொண்டிருந்த பாதை இரு வழி பாதையாக பிரிந்தது. எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அவளை கேட்க எண்ணி திரும்பியவன், அவளின் நிம்மதியான உறக்கத்தை பார்த்து அதை கலைக்க விரும்பாமல், வெளியே யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று காரை விட்டு இறங்கினான்.


  சற்று தூரம் தள்ளி ஒரு டீக்கடை இருக்க, அதை நெருங்கி சென்றான். விடியும் நேரமானதால் அப்போதுதான் கடைக்காரர் கடையில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.


  அந்தக் கடைக்கு சற்று தள்ளி ஒரு மினி வேனில், ஐந்தாறு பேர் கையில் ஏதோ போட்டோவுடன் வருவோர் போவோரை எல்லாம் கண்காணித்து கொண்டிருந்தனர்.


  அவர்களில் ஒருவனை ராகுலுக்கு எங்கோ பார்த்தது போன்று ஒரு ஞாபகம். நன்கு அவன் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்று இரவு நிரஞ்சனாவை தேடி வந்தவர்களில் இவனும் ஒருவன்.


    அப்படி என்றால் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பது நிரஞ்சனாவை பிடிப்பதற்காக தானா?


  உடனே வந்த வேகத்தில் காரினை நோக்கி சென்றவன், காரில் அமர்ந்து அவசரமாக காரினை திருப்பினான்.


  கார் கதவு அறைந்து மூடும் சத்தம் கேட்டு எழுந்த நிரஞ்சனா, தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்து புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பினாள். அதற்குள் ராகுல் வண்டியை திருப்ப,


    "என்ன பண்றீங்க நீங்க வந்த பாதை கரெக்ட் தான். எதுக்காக காரை திருப்புறீங்க? இப்படியே போனா தான் எங்க ஊருக்கு போக முடியும்."


  "அப்படியே போனா உங்க ஊருக்கு இல்ல, எமலோகத்துக்கு தான் போகணும். என்ன முழிக்கிறீங்க, கொஞ்சம் எட்டி பாருங்க, உங்கள துரத்திட்டு வந்த அந்த மந்திரவாதிங்க ரோட்ட மரிச்சு நின்னு, உங்க போட்டோவை வச்சுக்கிட்டு ஒவ்வொரு காரா கண்காணிச்சிட்டு இருக்கிறாங்க.


உங்க ஊருக்கு போக, வேற ஏதாச்சும் வழி இருக்கா?"


  அவள் பயந்து விழிகளுடன் இல்லை என்று தலையை ஆட்ட,


  "பயப்படாதீங்க வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம். உங்க ஊருக்கு வெளியில, யாராவது உங்க  சொந்தக்காரங்க இருக்காங்களா? இல்லாட்டி தெரிஞ்சவங்க யாராவது? அவங்க வீடு இங்க வெளியே இருந்தா, அவங்க மூலமா உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பார்க்கலாமே?"


"எங்க பக்கத்து ஊரான வேடந்தூர்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. அந்த ஊருக்குள்ள போய்ட்டா நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாது. மூர்த்தி தாத்தா எல்லாத்தையும் பார்த்துப்பாரு அங்க வேணும்னா போகலாம்."


    ராகுலும் சரியென்று ரஞ்சியிடம் வழி கேட்டு கொண்டே, வேடந்தூரை நோக்கி வண்டியை திருப்பினான். ஆனால் அவர்கள் அறியவில்லை, அங்கு தான் அவர்களுக்கான பேராபத்து காத்திருக்கிறதென்று.


  வெற்றி காரினை ஓட்டிட அவன் பக்கத்தில் சந்துரு அமர்ந்திருந்தான். பாட்டிகள் இருவரும் கடைசி சீட்டில் உட்கார்ந்து விட, இரண்டுக்கும் நடுவில் உள்ள சீட்டில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.


    "வெற்றி அப்படியே அந்த மெயின் ரோட்ல என்னை இறக்கி விட்டுடு. அங்கிருந்து நான் ஹாஸ்பிட்டல் போய்கிறேன்."


    "ஏன்டா நீ ஊருக்கு வரலையா?"


    "இல்ல வேந்தா அப்பா வேற வெளிநாடு போயிருக்காரு. வீட்ல அம்மாவும் தங்கச்சியும் மட்டும் தான் தனியா இருப்பாங்க. நான் அங்க வந்துட்டு உடனே திரும்பி வந்தாலுமே லேட்டாயிடும். அதோட ஹாஸ்பிடல்லயும் ஏதாவது எமர்ஜென்சின்னா ஆள் வேணும் இல்ல."


  இதனைக் கேட்ட மது உடனே சந்துருவைப் பார்த்து,


  "உங்க அப்பா வெளிநாடு போய் இருக்காரா? அவர் எப்ப போனாரு?" 


  ஆஹா கல்யாணம் ஆன அன்னைக்கே டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவான் போல இருக்கே என்று வேந்தன் மனதுக்குள் புலம்ப,


    அந்த நேரம் பார்த்து சரியாக வெற்றியின் கைப்பட்டு, காரில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.


மாட்டிக்கிச்சே...


மாட்டிக்கிச்சே...


மாட்டிக்கிச்சே ...


மாட்டிக்கிச்சே...


No comments:

Post a Comment