அத்தியாயம் 5
குடும்பத்தார் அனைவரும் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசட்டும் என்று மண்டபத்தில் அவர்களை தனித்து விட்டுவிட்டு, அவர்கள் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் தள்ளி அமர்ந்து கொண்டனர்.
வெகு நேர மௌனத்தை தானாக களைத்தாள் சந்தியா,
"உங்க அம்மா சொன்னாங்க நான் தான் உங்களுக்கு பார்த்திருக்க மொதோ பொண்ணுன்னு, எனக்கும் பார்த்த முதல் பையன் நீங்க தான்.
இதுவரைக்கும் யாரும் என்னை பொண்ணு பார்க்க வந்ததில்ல, நீங்க தான் முதல் முதல்ல வந்திருக்கீங்க, நீங்களே எனக்கு ஹஸ்பண்டா வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
உங்களோட ஜாப் பத்தி எனக்கு கவலையே கிடையாது, ஏன்னா கல்யாணம் ஆனதும் எங்க அப்பா எங்க கிட்ட இருக்குற மளிகை கடையில ஒன்னை எனக்கு எழுதி வச்சுருவாரு.
எப்படியும் அதிலிருந்து வருமானம் வரும், சோ அதுனால பிரச்சனையே கிடையாது."
முதலில் அவள் கூறிய அவன் பார்க்க வந்த முதல் பெண்ணே அவள் தான் என்ற கூற்றிலேயே திடுக்கிட்டவன், இது தனது தாயின் வேலையாக தான் இத இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்த வேளையிலேயே, அவள் அவனது தொழிலை பற்றி பேசி அவனது பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் தான் அவனைக் கண்டு ஆர்வமாக அவன் அருகே வந்தால் வைஷ்ணவி.
"ஹலோ ஹீரோ சார் எப்படி இருக்கீங்க?"
அவளை கண்டதுமே அடையாளம் கண்டு கொண்ட அர்ஜுன்,
"வணக்கம் மேடம், எப்படி இருக்கீங்க? அன்னைக்கு நீங்க செஞ்ச ஹெல்ப்னால தான் அந்த கல்யாணமே நடந்தது."
"அட விடுங்க, அது என்ன பெரிய விஷயமா? அப்புறம் உங்க வைப் எப்படி இருக்காங்க? அன்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம உங்க ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்தது இல்லையா?"
ஏற்கனவே அர்ஜுன் அழகான பெண்ணொருத்தியோடு, சிரித்து சிரித்து பேசியபடி இருந்ததை கண்டு பொருமிக் கொண்டிருந்த சந்தியா, அவள் கூறிய திருமணம் அதோடு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகியவற்றைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.
"என்னது? என்ன சொல்றாங்க இவங்க? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? அப்போ நான் என்ன உங்களுக்கு செகண்ட் வைப்பா? ஐயோ அம்மா… அப்பா… இங்க வந்து கேளுங்களேன் இவருக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சாம்.
அதோட அவருக்கு கல்யாணம் ஆனதை மறைச்சு என்னை பொண்ணு பார்க்க வந்திருக்காரு."
அவள் அழுது ஊரை கூட்டிக் கொண்டிருக்க சிந்தனை முடிச்சோடு அர்ஜுனை நோக்கினால் வைஷ்ணவி.
"ஐயோ மேடம் அன்னைக்கு அந்த பொண்ணை அவங்க காதலிச்ச பையனோட சேர்த்து வைக்கறதுக்காக தான் நான் கூட்டிட்டு போனேன். அந்த பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கல."
"இல்ல கார்ல அன்னைக்கு காதல் பத்தி எல்லாம் பேசினீங்க?"
"ஏங்க காதலிச்சா தான் காதலை பத்தி பேசணுமா? உங்களுக்கு டவுட்டா இருந்தா இதோ போட்டோ பாருங்க. அன்னைக்கு நடந்த கல்யாணத்தை இதோ இது தான் அந்த பொண்ணோட லவ்வர்."
வைஷ்ணவியை நோக்கி தனது மொபைலில் இருந்த போட்டோ ஆதாரத்தை அவன் நீட்டிக் கொண்டிருக்க, அதற்குள் இங்கு பெரிய பிரளயமே ஆரம்பித்து விட்டது.
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்ட வைஷ்ணவி தேவி,
"ஐய்யய்யோ மன்னிச்சிடுங்க சார், என்னால தான் இவ்ளோ பிரச்சனை நானே போய் உண்மையை சொல்லி இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கறேன்."
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேடம், நீங்க எனக்கு பெரிய ஹெல்ப் தான் பண்ணி இருக்கீங்க. எப்படிடா இந்த பொண்ணை வேண்டாம்னு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
கடவுளா பார்த்து உங்களை அனுப்பி வச்சிருக்காரு, நீங்க கிளம்புங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களே என்னை வேணான்னு சொல்லிட்டு போயிடுவாங்க."
"இல்லங்க எதுக்காக என்னால உங்களுக்கு கெட்ட பேரு?"
"அட நீங்க வேற மேடம் எனக்கு ஒன்னும் இது புதுசு கிடையாது, இதோட நிறைய பொண்ணுங்க என்னை பல காரணம் சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருக்காங்க, நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்."
வைஷ்ணவி அவனை திரும்பிப் பார்த்தபடியே சங்கடத்தோடு அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் மனதிற்கு ஏனோ கஷ்டமாக இருந்தது. அவன் என்ன தான் சமாதானம் கூறினாலும், தன்னால் அவனது திருமணம் தடைப்பட்டு விட்டதே என்ற ஒரு மன உறுத்தல் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது.
வழக்கம் போல அர்ஜுனின் திருமணம் பெண் பார்க்கும் வைபவத்தோடே நின்று விட்டது.
எப்போதுமே அவனை திட்டிவிட்டுச் செல்லும் அவனது தாய் கூட, இன்று ஒரு வார்த்தையும் பேசாமல் காரில் சென்று அமர்ந்து விட்டார்.
அதுவே அவன் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. காரில் செல்லும் போது தனது பக்க நியாயத்தை விரிவாக அவனது தாயாருக்கு எடுத்து கூற தொடங்கினான் அர்ஜுன்.
அதன் பிறகும் கூட விஜயலட்சுமியிடம் இருந்து வார்த்தை வராமல் இருக்க, சோபாவில் அமர்ந்திருந்த தனது தாயின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான் அர்ஜுன்.
"அம்மா ப்ளீஸ்மா நீ என்னை நாலு அஞ்சு அடி அடி, ஏன் இன்னும் ரெண்டு மணி நேரம் கூட திட்டு, அதை எல்லாத்தையும் தாங்கிக்குவேன்.
ஆனா இப்படி ஒண்ணுமே பேசாம அமைதியா என்னை வதைக்காதம்மா. நான் தான் எல்லாத்தையுமே சொல்லிட்டேனே, அதோட எனக்கு அந்த பொண்ணு பேசினது பிடிக்கலம்மா.
அந்த பொண்ணுகிட்ட இருந்து வரதட்சணை வாங்கி என்னை விலை போகச் சொல்றீங்களா? இல்ல என் சுயமரியாதையை இழக்க சொல்றீங்களா?
என் வேலைய பிடிச்சு எனக்காக ஒரு பொண்ணு வந்தா போதும். இந்த பணம் காசு எல்லாம் வாழ்க்கைக்கு அவசியம் தான். ஆனா அது மட்டுமே வாழ்க்கை கிடையாது, ஒத்துமையான வாழ்க்கைக்கு பணத்தை விட மனப்பொருத்தம் தான் என்னை பொருத்தவரைக்கும் வேணும்.
என்னை புரிஞ்சிக்கிட்டு ஒரு நல்ல பொண்ணு கண்டிப்பா இந்த வீட்டுக்கு மருமகளா வருவாம்மா."
அவன் பேசிவது நியாயம் தான் என்றாலும், விஜயலட்சுமி அமைதியாகவே இருந்து கொண்டார்.
தன் மகனின் மன வருத்தத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன் இரவு நேர தனிமையில் தன் மனைவியிடம் அவனுக்காக பேசினார்.
“ஏன் விஜி இந்த மௌனம்? உனக்கு தெரியாதா நம்ம பையனுக்கு உன் கோப பேச்சு தான் தினசரி சுப்ரபாதமே!
நம்ம பையன் மத்தவங்களுக்கு உதவி தானே செய்யறான், அதோட இன்னைக்கு அவன் இந்த சம்பந்தம் வேணாம்னு சில காரணங்கள் சொன்னானே, அது உனக்கு தப்புன்னு தோனுதா?”
“அவன் செஞ்சதை தப்புன்னு நான் சொல்லலைங்க, ஊருக்கெல்லாம் என் புள்ள நல்லது செய்யறான் ஆனா அவனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே அந்த வருத்தம் தான் எனக்கு.
ஒருவேளை நான் பேசாம இருந்தா, அதுக்காகவாவது என் புள்ள அவன் வேலையை மட்டும் பார்த்துகிட்டு, எந்த பிரச்சனைக்கும் போகாம இருப்பாங்கற ஒரு நப்பாசை தான்.
நம்ம காலத்துக்கு அப்பறம் அவனோட வாழ்க்கை முழுவதும் துணை நிற்க உறவுகள் வேணுங்க.
அதுக்காக தான் நல்ல குடும்பமா தேடித் தேடி பிடிக்கிறேன். ஆனா இந்த பையன் ஏதோ ஒரு பிரச்சனையை பண்ணி அந்த கல்யாணத்தையே நிறுத்திடறான்.”
மகனுக்காக பேச வந்தவர் இப்போது தன் மனைவியின் பேச்சில் உள்ள உண்மை புரிந்து அமைதியாகி விட்டார்.
அடுத்த இரண்டு நாட்கள் தன் தாயின் பின்னால் மன்னிப்பு வேண்டி சுற்றி கொண்டிருந்த அர்ஜுன், தனது உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த அவசர செய்தி காரணமாக உடனே வெளியூர் கிளம்பி விட்டான்.
மண்ணுக்குள் இருந்து கிடைத்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்த அர்ஜுனுக்கு அவசர தந்தி ஒன்று வந்திருந்தது.
அர்ஜுனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் உடனடியாக ஊருக்கு வருமாறு அவன் தந்தை தான் அவனுக்கு தந்தி அனுப்பி இருந்தார்.
அதை கண்டவுடன் அடித்து பிடித்து ஊருக்கு வந்திருந்தான் அர்ஜுன்.
No comments:
Post a Comment