Search This Blog

Followers

Powered By Blogger

Monday, August 4, 2025

மன்னவரே 75


 

             அத்தியாயம் 75


    மேனகா தேவிக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, தற்போது அவர் கண்ட அதிர்ச்சியான சம்பவத்தால், அவரின் கை கால்கள் இழுத்துக் கொள்ள, அப்படியே தரையில் விழுந்தார் வாய் ஒருபுறம் கோணிக் கொண்டு, தரையில் துடிக்க ஆரம்பித்தார்.


சத்தம் கேட்டு வந்து பார்த்த அங்கு காவல் புரியும் வீரர்கள், உடனே அரசருக்கு தகவலை தெரிவித்தனர்.


    அரச வைத்தியரை அழைத்து வந்து உடனே மேனகாதேவிக்கு முதலுதவி வழங்கப்பட்டது. தாங்க முடியாத அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இனி அவரால் தெளிவாக பேச முடியாது என்றும் அரச வைத்தியர் தெரிவித்து விட்டார்.


  தனது ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டு, நாளை பௌர்ணமி ஆதலால், எவ்வாறு ரத்னபுரிக்கு செல்வது என்று, யோசனையுடனே அரண்மனை திரும்பிய மோகனா, இந்த நேரத்தில் அரண்மனை முழுவதும் பரபரப்பாக இருப்பதை உணர்ந்தவள், காரணத்தை அறிந்து கொள்ள, ரஞ்சனியின் உடலுக்குள் புகுந்து, அவளும் தன் அறையில் இருந்து வெளியேறினால்.


   தனது அன்னையின் அறையில் அனைவரும் குழுமி இருப்பதை பார்த்து உள்ளே சென்றவள், மேனகா தேவியின் நிலையினை கண்டு பதறிப்போய் நின்றாள்.


  "மன்னா இதற்கு மேல் என் கையில் எதுவும் இல்லை, இனி அந்த ஆண்டவன் விட்ட வழி"


    என்று கூறிய வைத்தியர் அனுமதி பெற்று கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.


  அரசர் ஒரு முடிவுடன் வீரர்களை அழைத்து, அரண்மனை ஜோதிடரை நாளை காலை என்னை பார்க்கச் வரச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

  தனது அன்னையின் நிலைமையினை நினைத்து வருந்தி கொண்டிருந்தவளின் முகம் அடுத்த நிமிடமே பிரகாசமானது.

 

  அங்கே இருப்பவர்கள் அறியாமல் அங்கிருந்து வெளியேறிய மோகனா, தனது அறைக்கு வந்து சில மந்திரங்களை முணுமுணுத்தாள், அடுத்த நிமிடமே அங்கு ராட்சசன் ஒருவன் தோன்றி, மோகனாவை வணங்கி நின்றான்.


  "ரத்தமாறா உடனே நீ அரண்மனை ஜோதிடர் இருக்கும் இடத்திற்கு செல்,

அவன் அந்த சிவனடியாரின் சிஷ்யனாவான். அவன் உடலுக்குள் புகுந்து, நீ இங்கு வந்து சேர்வது முடியாத செயல், அதனால் அவனை இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விடு.


அரண்மனை காவலர்கள் அவனைத் தேடி வருவார்கள். நீ அந்த ஜோதிடனை போலவே உருமாறி நாளை அரண்மனைக்கு வந்து சேர்.அரசரின் முன் சோழிகளை உருட்டி நான் கூறுவது போலவே அரசரிடம் கூறு."


    மோகனா அவனிடம் கூறியவற்றை கர்ம சிரத்தியாக கேட்ட அந்த ராட்சசன்,


  "தங்கள் ஆணைப்படியே செய்கிறேன் தேவி." என்று கூறி மறைந்து விட்டான்.


  ராட்சசன் ஜோதிடரின் வீட்டிற்குச் சென்று, தகுந்த நேரத்திற்காக காத்து கொண்டிருந்தான். அரண்மனை காவலர்கள் வந்து அரசரின் ஆணையை கூறி சென்ற பிறகு, ஜோதிடர் அதிகாலையிலேயே ஆற்றுக்கு நீராடச் சென்றார். 


  தனது கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலைகளை கழட்டி வைத்துவிட்டு ஆற்றினுள் இறங்கினார். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ராட்சசன், திடீரென்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, அவரை ஆற்று நீரினுள் மூழ்கும்படி செய்து, அவரை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லுமாறு செய்தான். 


    தனது உருவத்தை ஜோதிடரின் உருவமாக மாற்றி கொண்டவன், அரண்மனையை நோக்கிச் சென்றான் அங்கு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர் பெருமக்களும் அந்த அதிகாலைப் பொழுதிலேயே ஒன்றாக குழுமியிருந்தனர்.


  அரசரை வணங்கி நின்றவனைப் பார்த்து அரசர், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  நிலைமையினை சரி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் பார்த்து கூறுமாறு கூறினார்.


    தீவிரமாக சோழிகளை உருட்டுவது போல நடித்தவன் அரசரைப் பார்த்து மோகனா கூறியவற்றை அப்படியே கூறத் தொடங்கினான்.


    "அரசர்ப் பெருமானே ஏதோ கெட்ட சக்திதான் நமது நாட்டை ஆட்டி படைக்கின்றது. இந்த பாவமானது ஒரு கன்னி பெண்ணின் இறப்பினால் நேர்ந்தது. இந்த பாவத்திலிருந்து நம் நாடு மீள வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு கன்னிப் பெண்ணை கொண்டு தான் பரிகாரம் செய்ய வேண்டும்.


  ஒரு கன்னிப்பெண், அண்டை நாட்டில் இருக்கும் சிவாலயங்களில் உள்ள, லிங்கதிருமேனியாருக்கு தனது கைகளாலேயே அபிஷேக பூஜையினை  பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும். அந்த சிவபெருமானின் அருட்பார்வையால் நமது நாடு அந்த கெட்ட சக்தியிலிருந்து மீண்டுவிடும்."


    அரசரும் அமைச்சர்களும் யாரை அனுப்பலாம் என்ற யோசனையில் இருக்க ரஞ்சனியே முன்வந்து தான்  சென்று வருவதாக கூறினாள்


      ஆனால் அரசர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, ஏற்கனவே தனது குடும்பத்தை இழந்து வாடும் ரஞ்சனியை, இப்படி ஒரு பிரச்சனையில் இழுத்து விட அவருக்கு மனம் ஒப்பவில்லை.


  ரஞ்சனி, இது மோகனாவால் ஏற்பட்ட பிரச்சனை. இதற்கு, தான் செல்வது தான் சரியாக வரும் என்று எடுத்துக் கூறினால், ஜோதிடரும் தானும் உடன் சென்று வருவதாக கூற, அரசர் அரை மனதாக ஒப்புக் கொண்டார். இன்று பௌர்ணமி ஆதலால் இன்றிலிருந்தே அந்த பூஜையை ஆரம்பித்து விடலாம் என்று ஜோதிடர் கூறினார். 


  ரகுநந்தனும் பிரதீபனும் தற்போது நாட்டில் இல்லாத காரணத்தால், மித்ரனை அவர்களுடன் அனுப்பி வைக்க முடியவில்லை, ஆதலால் அரசர் அவர்களை படைவீரர்கள் புடை சூழ பக்கத்து நாட்டிற்கு சிவபூஜை செய்ய அனுப்பி வைத்தார்.

 

பிரதீபன் ரத்னபுரியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு அங்குள்ள மக்களின் துயர்களை துடைக்க தொடங்கினான். ரங்கராஜ பூபதியின் ஆட்சியில் அதிகமான வரிகளும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மக்கள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்தோடு படை வீரர்களின் அத்துமீறல்களும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.


    பிரதீபனின் ஆட்சியில் தான் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பிரதீபனும் போர்க்களத்தில் தப்பிச் சென்ற ரங்கராஜ பூபதியை தேடிக் கொண்டு தான் இருந்தான். பிரதீபன் அவ்வப்போது நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்து கொண்டிருந்தான், அவ்வாறு அவன் நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்த வேளையில் லந்தங்காட்டு பகுதிக்கு வந்திருந்தான்.


  லந்தங்காட்டுக்கு வெளியே பரிதவிப்போடு நின்றிருந்த ரஞ்சனி, பிரதீபனைக் கண்டு ஆன்மாவாக அவனை நோக்கி சென்றாள். பிரதீபனாவது அவளுடைய அத்தானை காப்பாற்ற மாட்டானா, என்று அவனை சுற்றி சுற்றி வந்தால். ஆனால் அவள் ஆன்மாவாக இருந்த காரணத்தால் அவளால் தங்களது நிலைமை அவனிடம் புரிய வைக்க முடியவில்லை.


    அவன் லந்தங்காட்டை நெருங்கும்போது மகிழபுரியிலிருந்து வந்திருந்த தூதுவன் ஒருவன், அரசரிடமிருந்து ஒரு அவசர செய்தி வந்திருப்பதாக கூறினான். மேனகா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் உடனே வந்து பார்க்குமாறும் அரசரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.


    பிரதீபனுடன் இருந்த ரஞ்சனி, இன்னொருமுறை மோகனாவிடம் பேசி முயற்சித்து பார்க்கலாம் என்று, பிரதீபனுடன் மகிழபுரியை நோக்கி சென்றாள்.

No comments:

Post a Comment