Search This Blog

Followers

Powered By Blogger

Friday, July 11, 2025

மன்னவரே 58


 

             அத்தியாயம் 58


         மகாராணியார் தன்னிடம் இருந்த கற்களை அரண்மனை பொற்கொல்லரிடம் கொடுத்து நீல கற்கள் பதித்த தங்ககாப்புகளை செய்தார். அதை பூஜை அறையில் சாமி சிலையின் பாதத்தில் வைத்து, பூக்களால் அதை மறைத்து தினம் தோறும் பூஜை செய்து வந்தார்.


  மோகனாவிற்கு பூஜை அறைக்கு சென்று கடவுளை வழிபடுவது என்றாலே பிடிப்பதில்லை. இருந்தும் மற்றவர்களின் சந்தேக வட்டத்திற்குள், தான் வரக்கூடாது என்பதற்காக அதை செய்து வந்தால். ஆனால் சில நாட்களாக பூஜையறை வாசலை கூட அவளால் மிதிக்க முடியவில்லை. பூஜை அறையை நெருங்கும் போதே அவள் உடம்பு கொதிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த மாற்றம் ஏன் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.


  அவள் இவ்வளவு நாள் காலகோடருக்கு செய்து வந்த பூஜையின் பலனாக சில சக்திகளை மட்டும் பெற்று இருந்தால் முழுமையான சக்தியை அவள் அடைய வேண்டும் என்றால், இன்னும் இரண்டு வேள்விகளை காலகோடனுக்காக அவள் செய்து முடிக்க வேண்டும்.


    அந்த நாளுக்காக தான் அவளும் காத்திருக்கிறாள். அப்படி ஒன்று நடந்து விட்டால் இனி எதை பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அத்தானை மணந்து கொண்டு, இந்த ராஜ்யத்தை ஆட்டிப்படைக்கலாம் என்பது அவளின் திட்டம்.


    ஆனால் சில நாட்களாக அடுத்த தலைவலியாக, மித்ரன் படைகளில் உள்ள ஆட்களைப் பற்றி விசாரிக்க தொடங்கியிருந்தான். அத்தோடு வெளி ராஜ்யத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருப்போரை பற்றியும் ஆராயத் தொடங்கி விட்டான். புதிதாக நாட்டில் உள்ளே நுழைப்பவர்களுக்கும் அனுமதி இல்லை. இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவளின் தந்தையை அவளால் காண முடியவில்லை. தனது பணிப்பெண் மூலமாகத்தான் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.


  மகாராணியார்  தனது மகனிடம் எவ்வாறு அவனது திருமணம் நடந்தது என்பதை, எப்படி கேட்பது என்று தெரியாமல் மனதுக்குள்ளேயே மருகினார்.


ஆனாலும் அவர் மித்ரனை கண்காணிக்க தவறவில்லை.


  காட்டில் உள்ள மதுராவிற்கு ஆயுதப் பயிற்சிகள் முடிந்து, மந்திரப் பயிற்சிகள் ஆரம்பமாகி இருந்தது


  ஏந்திழை அம்மையாரின் கனவில் தோன்றிய கொற்றவை தேவி, மதுராவிற்க்கு அனைத்து பயிற்சிகளையும் பயிற்றுவிக்குமாறு அவருக்கு ஆணையிட்டார்.


    இந்த பயிற்சிகள் அனைத்தும் முழுமையாக அம்மனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிறகு ஆரம்பமாவது. ஆனால் இவற்றை இப்போதே மதுராவுக்கு கற்று க் கொடுக்குமாறு தேவி கூறியதும், ஏந்திழை அம்மையார் குழப்பத்தில் ஆழ்ந்தார். இருந்தும் தேவியின் கட்டளையை மீற முடியாமல், மதுராவுக்கு அத்தனை பயிற்சிகளையும் வழங்க தொடங்கினார்.


  ஒரு தாயாக தனது மகளுக்கு குடும்பம் குழந்தை என்று நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்று அவர் நினைத்தார். எப்படியும் தேவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்பது பிறப்பிலேயே உறுதியாகி விட்டது. தான் கூட முப்பது வயதில் தான் இப்படி பயிற்சியை பெற்றுக் கொண்டேன், ஆனால் இந்த சிறு வயதிலேயே மதுரா தன்னை அர்ப்பணிக்க வேண்டுமா என்று கவலை கொண்டார்.


  இந்த பயிற்சி காரணமாக மதுராவால் ஊருக்குள் சென்று தீரனை கண்டு வரவும் முடியவில்லை.


  ஏந்திழை அம்மையார் இன்று மதுராவிற்கு மருத்துவ பயிற்சி அளிப்பதற்க்காக குகை கோயிலுக்கு அழைத்து வந்திருந்தார். மூலிகைகளோடு சேர்ந்து கூற வேண்டிய மந்திரங்களையும் இன்று மதுராவிற்கு பயிற்றுவிக்கப் போவதாக கூறியிருந்தார்


    அவளை குகையில் இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பாவுடன் காட்டிற்குள் மூலிகை பறிப்பதற்காக சென்றார்.


    மித்ரன் ஏரிக்கரையின் மூலம் குகையை அடையலாம் என்று, அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் குதிரையில் புறப்பட்டான்.


  ஆனால் அவனே அறியாமல் ரகுநந்தன் அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். சிறிது தூரத்திற்கு பிறகு  தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்த மித்ரன், ஒரு திருப்பத்தில் ஒளிந்து கொள்ள, அவனை பின்தொடர்ந்து வந்த ரகுநந்தன் மித்ரனை காணாது அங்கும் இங்கும் தேடினான். அவன் முன்பு வந்த மித்ரன்,


    "இப்போது எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறாய்?"


  "அது நான் இளவரசருக்கு மெய் காப்பாளன், அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது எனது கடமை அல்லவா? அதனால் தான் தங்களை தொடர்ந்து வருகிறேன் இளவரசே."


  "இப்போது நீ படைத்தளபதி அங்கல்லவா நீ இருக்க வேண்டும்?"


   "தங்களை என்றுமே பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, மகாராணியார் எனக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால் தாங்கள் எங்கு சென்றாலும் நானும் உடன் வருவேன். இது என் கடமை இளவரசே."


  "அப்படியா நான் எங்கு சென்றாலும் நீயும் உடன் வருவாயோ? நான் அந்த காட்டினை ஒட்டி உள்ள ஏரியில் குதித்து, எவ்வளவு நேரம் என்னால் மூச்சை பிடித்துக் கொண்டு இருக்க முடியும் என்று, சோதித்து பார்க்க உள்ளேன். நீயும் உடன் வருகிறாயா? எவ்வளவு நேரம் உன்னால் மூச்சு பிடிக்க முடியும் என்று பார்க்கலாம்."


  சொல்லிய மறுநிமிடமே மித்ரன் ஏரியில் குதித்திருந்தான். அவனைத் தொடர்ந்து ரகுநந்தனும் ஏரிக்குள் குதித்தான்.


    ஏரியில் குதித்த இருவரும் மூச்சினை பிடித்துக் கொண்டு ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தனர்.


    மித்ரன் சிறிது நேரத்திலேயே காட்டை ஒட்டியுள்ள ஏரிக்கரைக்கு வந்து அந்த சுரங்கத்திற்குள் நுழைந்தான்


  சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த ரகுநந்தன் மித்ரனை காணாமல் ஏரியின் நீருக்குள் சென்று முழுவதும் தேடினான். ஆனால் மித்திரனை எங்குமே காணவில்லை.


  "அய்யய்யோ அன்று பிரதீபன் சொன்னது போல் இங்கு மோகினி நடமாட்டம் உள்ளதோ? என் கண்முன்னே ஏரி நீருக்குள் பாய்ந்தவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லையே? இப்போது மகாராணியாருக்கு நான் என்ன பதில் உரைப்பேன்? அடே மித்ரா என்னை இப்படி தனியாக புலம்ப வைத்து விட்டு எங்கேயடா சென்றாய்?"


  மதுரா குகைக்குள் இருக்கும் அந்த குளத்து நீரை பார்த்து அதனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


  "அந்த தீரா வீடு திரும்பி எவ்வளவு நாட்கள் ஆகின்றது. ஆனால் இன்னும் என்னை வந்து அவன் பார்க்கவில்லையே? ஒருவேளை என்னை மறந்து விட்டானோ? நிச்சயமாக இருக்காது, ஏதாவது வேலையாக இருக்கும். ஒருவேளை அந்த இளவரசருக்கு வேறு ஏதாவது ஒரு பயிற்சியை ஆரம்பித்ததால், அதற்கு துணையாக சென்றிருக்கிறானோ என்னவோ?"


குளத்திற்கு அருகே பேசும் சித்திரப்பாவை போல் அமர்ந்திருந்த மதுராவை கண்ட மித்ரன், நீரினுள் இருந்து மேலே எழும்ப, திடீரென்று இதை எதிர்பார்க்காததால் தடுமாறி விழப்போன மதுராவை, தன் கைகளில் ஏந்தி கொண்டான்.


    இன்னும் தான் நீரில் நனையாமல் இருப்பதை உணர்ந்து, கண்களை திறந்து பார்த்த மதுரா, தான் ஒரு ஆடவன் கைகளில் இருப்பதைக் கண்டு அவன் கைகளில் இருந்து துள்ளி கொண்டு கீழே இறங்கினாள்.


     " யார் நீ? இங்கு எப்படி வந்தாய்?"


No comments:

Post a Comment