Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, June 10, 2025

மன்னவரே 30


 

             அத்தியாயம் 30


  வேந்தன் மதுவுடன் பி.ஆர் ஹாஸ்பிடலின் முன்பு, காரில் சென்று இறங்கினான். 


      அங்குள்ள ரிசப்ஷனில் தங்கள் பெயரை பதிந்து விட்டு, தங்கள் டோக்கன் நம்பர் வரும்வரை அங்கேயே காத்திருந்தனர்.


அவன் காரில் வரும்போதே மதுவிடம் சந்துரு மற்றும் லாவண்யாவின் காதல் கதையை பற்றி கூறிவிட்டான்.


    அவர்களின் திருமண விசயமாக தான் இவளிடம் உதவி கேட்டதாக கூறியிருந்தான்.


  "இங்க தான் லாவண்யா ஒர்க் பண்றாங்களா?"


  "ஆமா நான் இங்க ஆல்ரெடி அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டேன், டோக்கன் படி நாம உள்ள போற டைமுக்கு தான் கரெக்ட்டா வந்து இருக்கோம்னு நினைக்கிறேன்"


  "அவங்களோட சர்டிபிகேட் எல்லாத்தையும் வெளியே வைச்சே வாங்கிக்களாமே, எதுக்காக ஹாஸ்பிடல் வரைக்கும் வந்திருக்கோம். அதுவும் பேஷன்ட்டா போனாதான் அவங்களை பார்க்க முடியுமா?"


    "மினிஸ்டர் பொண்ணை அவ்ளோ சீக்கிரம் வெளியே வச்சு பார்க்க முடியாதில்ல."


      "எது மினிஸ்டர் பொண்ணா?!"


    " மினிஸ்டர்  பொண்ணுரங்கத்தோட பொண்ணு தான் லாவண்யா. இது அவங்களோட ஹாஸ்பிடல் தான்."


    "மிஸ்டர் எம்டி சார், நீங்க என்னை கோர்த்து விடனும்ங்கறதுக்காக ஒன்னும் கூட்டிட்டு வரலையே?"


    "நோ மிஸ் மதுரம். எந்த ஒரு ஆபத்தாக இருந்தாலும் என்னை மீறி தான் அது உன்னை தொடணும்."


      அவளின் கண்களை பார்த்துக் கொண்டு ஆழ்ந்த குரலில் இவன் கூற, மது  அவன் கண்களில் தெரியும் மனதின் ஆழத்தில் தொலைந்து கொண்டிருந்தாள்.


  "மிஸ்ஸஸ் மதுரயாழினி யுவேந்திர பாண்டியன்"


  மது திரும்பி வேந்தனை முறைக்க


  "அது... லாவண்யா ஒரு மகப்பேறு மருத்துவர், அர்ஜென்ட் அப்பாயின்மென்ட் வாங்க வேற என்ன சொல்றதுன்னு தெரியல அது தான்...சிஸ்டர் இங்க இருக்கோம். "


    "சார் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க, மேடம் நீங்க அந்த ரூமுக்குள்ள போய் வெயிட் அண்ட் பிபி செக் பண்ணிட்டு வந்துடுங்க."


    மது வேந்தனை முறைத்துக் கொண்டே அந்த ரூமுக்குள் சென்று பிபி மற்றும் வெயிட் பார்த்துவிட்டு வெளியில் வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.


  "என்ன சொல்லி தொலைச்சிருக்கீங்க ஹாஸ்பிட்டல்ல?"


  "அது...சும்மா ஜென்ரல் செக்கப் தான்."


    "எந்த ஜென்ரல் செக்கப்க்கு கடைசியா குளிச்ச டேட் கேக்குறாங்க?"


  "கடைசியா குளிச்ச டேட்டா? அப்ப நீ தினமும் குளிக்க மாட்டியா?"


      ஐயோ முறைக்கிறாளே முறைக்கிறாளே என்னை இப்படியே எரிச்சு சாம்பலாக்கிடுவா போல இருக்கே. இதுக்கே இப்படின்னா, இனி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எப்படி சமாளிக்க போறேனோ.


    ஆபத்பாந்தவர் போல நர்ஸ் வந்து இவர்களை அழைக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளுக்கு முன் இவன் நர்சை பின் தொடர்ந்தான்.


    இருவரையும் டாக்டரின் அறைக்குள் அனுப்பிவிட்டு நர்ஸ் வெளியே சென்றுவிட, லாவண்யா தான் முதலில் பேச்சை தொடங்கினாள்.


      "அண்ணா ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதற்கு. இந்த கவர்ல நீங்க கேட்டா எல்லா டாக்குமெண்ட்ஸும் இருக்கு. கல்யாணத்தப்போ கரெக்டா நான் அந்த டைமுக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எப்படியாவது வந்துடுவேன்"


  "தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா உன்னோட சிச்சுவேஷன் எனக்கு தெரியும். இதுவே உன் பேரன்ட்ஸ்ட பேசி சம்மதிக்க வைக்க முடிந்திருந்தால், கண்டிப்பா நானே சந்துரு ரிஜிஸ்டர் மேரேஜ்ன்னு சொல்லும்போதே வேண்டாம்னு சொல்லி இருப்பேன்.


    நான் சந்துருகிட்ட சொன்னேன்மா, அவங்க அப்பா கிட்டயாவது இந்த விஷயத்தை சொல்லுன்னு, அவன் தான் கேட்க மாட்டேங்கிறான். 


      கல்யாணம்கிறது சாதாரணமா கடந்து போற விஷயம் கிடையாது. இந்த விஷயத்துல ஏதாவது ஒரு குடும்பத்தோட சப்போர்ட் இருந்தால் தானே நல்லா இருக்கும்."


    "அவரை ஏதும் சொல்லாதீங்கனா, நான் தான் வேண்டாம்னு சொன்னேன். உங்களுக்கே தெரியும் எங்க அப்பா அரசியல்வாதி, அவரோட நடவடிக்கை எல்லாம் எப்படி இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.


    இது இந்த ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனா சந்துருவோட அப்பா நேர்மை உண்மைன்னு வாழ்றவர்.


    அவர் ஹாஸ்பிடல் நடத்துவதே மத்தவங்களுக்கு உதவி செய்ய தான்.


      ஆனா இந்த ஹாஸ்பிடல்ல? இருக்கிற உயிரை எடுக்காம இருந்தா சரி. விட்டால் இறந்து போனவங்ககிட்ட இருக்கிற கிட்னியவே வித்து காசு ஆக்கலாம்னு நினைப்பாங்க.


  அவர் இப்படி சேர்க்கிற பாவம் எல்லாம் குடும்பத்தில இருக்கற, எங்க தலை மேலதான் விடியும். இப்படிப்பட்டவரோட பொண்ணை, சந்துருவோட அப்பா அவங்க வீட்டு மருமகளா ஏத்துப்பாறாண்ணா."


    மதுவிற்கு லாவண்யாவை மிகவும் பிடித்து விட்டது. தவறான வழியில் செல்லும் பெற்றவருக்கு பிறந்திருந்தாலும், நெறி தவறி நடப்பதற்கான வாய்ப்பு இருந்தும், நெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவளை எப்படி பிடிக்காமல் போகும்.


  "கையை குடுங்க மேடம், இன்னைல இருந்து நான் உங்க விசிறி ஆயிட்டேன். வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்லுவாங்க, அதேபோல அரசியல்வாதியோட பொண்ணா இருந்துட்டு, இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே!


      ஒருவேளை அவரோட பொண்ணா இருக்கிறதால தான், நீங்க இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களோ? 


    சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, ஆனாலும் நீங்க அரசியல்வாதியோட பொண்ணுன்னு ரொம்ப நல்லா நிரூபிக்கிறீங்க மேடம். ஆமா பின்ன, மூச்சு விடாமல் இவ்வளவு நீளமா டயலாக் பேசறீங்களே."


  தனது தந்தையால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலையை எண்ணி, வருந்தி கொண்டிருந்த லாவன்யா மது பேசியதை கேட்டு தன் கவலைகளை மறந்து முகம் மலர்ந்தால்.


  "இவர் இப்போதைக்கு என்னை அறிமுகப்படுத்த போறதில்ல, ஐ அம் மிஸ் மதுரயாழினி. இந்த ஹாஸ்பிடல்ல கால் வைக்கிற வரைக்கும் இவரோட பிஏவா தான் இருந்தேன்.


  உங்கள பார்க்கறதுக்காகவே இவரோட ப்ரெக்னன்ட் வைப்பா இங்க உட்கார்ந்து இருக்கேன், அத்தோட உங்களுக்கு சப்ஸ்டிடியூட்டா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல விண்ணப்பம் கொடுக்கப் போறவளும் நான் தான். "


  "ஹாய் மது என்னை நீ லாவண்யான்னே கூப்பிடலாம். ரொம்ப தேங்க்ஸ் நீ எனக்கு செய்யப் போற உதவி ரொம்ப பெருசு."


    "இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கண்டிப்பா உங்களோட நல்ல மனசுக்காகவே, இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு என்னால முடிஞ்ச எந்த ஹெல்ப் வேணாலும் பண்ணுவேன். இது என்னோட ப்ராமிஸ்."


  மது இப்படி கூறியதும் வேந்தனின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.


    ஆஹா இந்த அறுந்த வாலு அவளாவே கமிட் ஆகிட்டாளே, ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இவளை எப்படி சமாளிக்க போறமோன்னு ரொம்பவே கவலையா இருந்துச்சு, எப்படியோ அந்த பிராப்ளமும் இப்ப தீர்ந்தது. இவளை இப்படியே கூட்டிட்டு போய் முதல்ல வேலையை முடிக்கிற வழியை பார்க்கணும்.

No comments:

Post a Comment